நான்காரைச் சக்கரம் - வேட நாயக

நான்காரைச் சக்கரம் - சித்திரகவி
வேட மாமலை நாடவே
வேட நாயக னாடவே
வேட னாரடி பாடவே
வேட பாவையு மாடவே !

கருத்து : 

வேடர்கள் வாழ்கின்ற திருத்தணிகை மலையினை நீ நாடிச் சென்றால், அங்கே அழகு மயிலில், வேட நாயகனான முருகப் பெருமானின் எழில் மிகுந்த நாட்டியத்தைக் காணும் பாக்கியம் நேரலாம் ! மேலும் வேடர் குலத்து மருமகனாகிய முருகனின் திருவடிகளை அங்கே கண்டு நீ போற்றிப் பாடினால், வேடர்களில் அழகுப் பாவையான குற வள்ளியும் முருகனுடன் சேர்ந்து ஆடுகின்ற காட்சியினைக் காண நேரலம் !

-விவேக்பாரதி
29.04.2016

Comments

Popular Posts