சக்திபதம்

விண்ணோடு தவழ்ந்தாடும்
வெண்ணிலவுப் பிறைநுதலாய்
விண்மீன்கள் குவித்தடைத்த
கண்ணோடு நகைகாட்டிச் !
செங்கதிரை உடலெல்லாம்
தங்கமெனத் தரித்தாடி !
எங்குமுறை தமிழமுதை
எங்கருத்தில் கொடுத்தாண்டு !
பக்தியில்நான் எழுதிவைத்த
இக்கவியின் பொருட்சுவையை
மிக்கசிறப் புறச்செய்யும்
சக்திபதம் தொழுகின்றேன் !

-விவேக்பாரதி
18.02.2015

Comments

Popular Posts