அன்புள்ள வாலிக்கு
நாடகத்தில் பிறந்து
கவிதையிலே வளர்ந்து
பாடலினால் வானடைந்து
பட்டாம்பூச்சி !
எம்.ஜி.ஆரில் துவங்கி
சிவகார்த்திகேயன் வரை
எல்லார் மடிமிசை தவழ்ந்த
கவிதைப் புத்தகம் !
இவன் ஜிப்பா போட்ட ஜிப்ரான்
பேனா பிடித்தக் கம்பன் !
கண்ணதாசன் கரம் பிடித்துப்
பட்டுக்கோட்டை பால் குடித்து
கலைஞருக்குக் குழந்தையான
வாலிபக் கவி !
இவன் கையில்
பேப்பரும் பேனாவும்
பாப் டான்ஸ் ஆடும் !
இவனது
மூக்குக் கண்ணாடி
முக்காலா பாடும் 1
வார்த்தைக் கனைகளைக்
கோர்ப்பதில் பார்த்தன் !
வசனக் கதைகொண்ட
புஜபல வீமன் !
காதல் கவிகளில்
கோபியர்க் கண்ணன் !
அன்பென்று வந்தால்
கொடையினில் கன்னன் !
அவதாரப் புருஷனால்
அகிலம் அளந்தான் !
திரைஇசைப் பாட்டால்
அணுவைப் பிளந்தான் !
சுந்தரி என்றாலும்
கலாசலா என்றாலும்
வற்றாமல் பாயும் கவிதை நதி !
மார்கழித் திங்கள்
யார்நெஞ்சில் யாரோ
எனும்வரி சொல்லும் இவன் காதல் விதி !
தத்துவப் பாடல்கள்
சத்திய முரைக்கும் !
திராவிடம் விரும்புவான்
நெற்றியில் திருநீர் திளைக்கும் !
ஏன் என்ற கேள்வி ?
நான் ஆணையிட்டால்
என்கின்ற வரிகளில்
புரட்சி வரும் !
ஓ....மரியா !
கேர்ள்பிரின்ட் வேணும்
என்பவை எல்லாம்
சிலிர்ப்பைத் தரும் !
கம்பன் கண்ட
காவிய வாலி
புஜபலம் கொண்ட
போராளி !
கலியுகம் கண்ட
கவிஇவன் வாலி
சொல்பலம் கொண்ட
பேராழி !
-விவேக்பாரதி
29.10.2014
கவிதையிலே வளர்ந்து
பாடலினால் வானடைந்து
பட்டாம்பூச்சி !
எம்.ஜி.ஆரில் துவங்கி
சிவகார்த்திகேயன் வரை
எல்லார் மடிமிசை தவழ்ந்த
கவிதைப் புத்தகம் !
இவன் ஜிப்பா போட்ட ஜிப்ரான்
பேனா பிடித்தக் கம்பன் !
கண்ணதாசன் கரம் பிடித்துப்
பட்டுக்கோட்டை பால் குடித்து
கலைஞருக்குக் குழந்தையான
வாலிபக் கவி !
இவன் கையில்
பேப்பரும் பேனாவும்
பாப் டான்ஸ் ஆடும் !
இவனது
மூக்குக் கண்ணாடி
முக்காலா பாடும் 1
வார்த்தைக் கனைகளைக்
கோர்ப்பதில் பார்த்தன் !
வசனக் கதைகொண்ட
புஜபல வீமன் !
காதல் கவிகளில்
கோபியர்க் கண்ணன் !
அன்பென்று வந்தால்
கொடையினில் கன்னன் !
அவதாரப் புருஷனால்
அகிலம் அளந்தான் !
திரைஇசைப் பாட்டால்
அணுவைப் பிளந்தான் !
சுந்தரி என்றாலும்
கலாசலா என்றாலும்
வற்றாமல் பாயும் கவிதை நதி !
மார்கழித் திங்கள்
யார்நெஞ்சில் யாரோ
எனும்வரி சொல்லும் இவன் காதல் விதி !
தத்துவப் பாடல்கள்
சத்திய முரைக்கும் !
திராவிடம் விரும்புவான்
நெற்றியில் திருநீர் திளைக்கும் !
ஏன் என்ற கேள்வி ?
நான் ஆணையிட்டால்
என்கின்ற வரிகளில்
புரட்சி வரும் !
ஓ....மரியா !
கேர்ள்பிரின்ட் வேணும்
என்பவை எல்லாம்
சிலிர்ப்பைத் தரும் !
கம்பன் கண்ட
காவிய வாலி
புஜபலம் கொண்ட
போராளி !
கலியுகம் கண்ட
கவிஇவன் வாலி
சொல்பலம் கொண்ட
பேராழி !
-விவேக்பாரதி
29.10.2014
Comments
Post a Comment