பேய்கள் ஆட்டம்

காரிருள் சூழும்
காற்று வீசிடும்
சன்னல்கள் படபடக்கும்
சத்தம் மிகக்கேட்கும்

ஓநாய்கள் ஊளையிடும்
ஒற்றைநிலா மறையும்
டிக்டிக் கடிகாரம்
திடீரென நின்றுவிடும்

ஏவல்கள் ஓலங்கள்
ஏதேதோ எதிரொலிக்கும்
வீட்டின் பொருளெல்லாம்
விழுந்து உடன் நொறுங்கும்

கனவுகள் பலவந்து
கண்தூக்கம் தான் கெடுக்கும் !
தனியறையில் ஆள்நடக்கும்
தன்மை தோன்றி நிற்கும் !

படுக்கையில் படுக்கையில்
பாதம் பிடித்திழுக்கும்
மரங்கள் கூத்தாடும்
மணத்தில் ஒரு நாற்றம்வரும் !

பின்னால் யாரோ
இருப்பது போல் தோன்றும்
திரும்பத் திசைமாறும்
திடுக்கென்று முன்தோன்றும் !

தொடருமிந்த பேயாட்டம்
பல
தோட்டத்து வீட்டுக்குள்ளே!

-விவேக்பாரதி
08.12.2013

Comments

Popular Posts