சிந்திய குருதிகள்
இந்திய விடுதலையில் சிந்திய குருதிகள்
சிந்து நதியென ஓடியதே !
முந்தைய நாள்நாம் தந்தையர் நாடுமே
முட்களின் மேலே வாடியதே !
சந்ததி நாமதை சந்தித் திடவே
கூடா தென்று நாடியதே !
சுந்தர பூமிநம் இந்திய நாடுமே
சுகம்தரும் சுதந்திரம் தேடியதே !
எத்தனை வீரர்கள் முத்தென வந்தனர்
பாரதம் தன்னைப் பேணுதற்கே !
சித்தரும் வந்தே சத்தியம் சூடினர்
சுதந்திரத் தவமும் பூணுதற்கே !
நித்தமும் பாமரர் சத்துடன் சேர்ந்தனர்
வெள்ளையன் ஒதுங்கி நாணுதற்கே !
நித்திலப் பெண்களும் பத்தியம் வைத்தனர்
விடுதலைக் குழந்தையைக் காணுதற்கே !
உண்ணும்நம் உணவு எண்ணிலா உழவர்
விரும்பி எற்திட்ட பத்தியமே !
புண்களுக் கெல்லாம் உண்மையி லேயே
மருந்துகள் கிட்டும் நித்தியமே !
மண்ணிடை மாய்ந்தோர் விண்ணிடை சேர்வார்
என்பது இங்கே தத்துவமே !
திண்ண முடையதாய் எண்ணங்கள் யாவுமே
வளர்ந்தது ! விடுதலை சத்தியமே !
-விவேக்பாரதி
13.08.2014
சிந்து நதியென ஓடியதே !
முந்தைய நாள்நாம் தந்தையர் நாடுமே
முட்களின் மேலே வாடியதே !
சந்ததி நாமதை சந்தித் திடவே
கூடா தென்று நாடியதே !
சுந்தர பூமிநம் இந்திய நாடுமே
சுகம்தரும் சுதந்திரம் தேடியதே !
எத்தனை வீரர்கள் முத்தென வந்தனர்
பாரதம் தன்னைப் பேணுதற்கே !
சித்தரும் வந்தே சத்தியம் சூடினர்
சுதந்திரத் தவமும் பூணுதற்கே !
நித்தமும் பாமரர் சத்துடன் சேர்ந்தனர்
வெள்ளையன் ஒதுங்கி நாணுதற்கே !
நித்திலப் பெண்களும் பத்தியம் வைத்தனர்
விடுதலைக் குழந்தையைக் காணுதற்கே !
உண்ணும்நம் உணவு எண்ணிலா உழவர்
விரும்பி எற்திட்ட பத்தியமே !
புண்களுக் கெல்லாம் உண்மையி லேயே
மருந்துகள் கிட்டும் நித்தியமே !
மண்ணிடை மாய்ந்தோர் விண்ணிடை சேர்வார்
என்பது இங்கே தத்துவமே !
திண்ண முடையதாய் எண்ணங்கள் யாவுமே
வளர்ந்தது ! விடுதலை சத்தியமே !
-விவேக்பாரதி
13.08.2014
Comments
Post a Comment