வாய்ப்பு

தாய்ச்சொல் தனையுமே தட்ட முயலுதல் தாழ்வுதரும்
காய்ச்சொல் தனையும் களைந்தே இனிக்கும் கவியுரைப்பாய்
ஆய்சொல் அவிழ்ப்பவர் ஆசான் மொழியை அரவணைப்பாய்
வாய்ப்பு வருகையில் வாசல் திறந்திடு மானிடனே

ஏய்த்துப் பிழைப்பவர் என்றும் உலகினில் ஏற்றமற்றார்
தேய்த்தே உடலது தேய உழைப்பவர் தேவரொப்பார்
மாய்த்தே உனையுமிம் மண்ணில் விழுவது மாதவமோ
வாய்ப்பு வருகையில் வாசல் திறந்திடு மானிடனே !

-விவேக்பாரதி
24.04.2015

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1