நற்கொலுசு

நண்பகல் போழ்திலே நல்லொளி வீசிடும்
மன்பெருஞ் சூரியன் மாயிருள் வேளையில்
வந்திடும் வெண்ணிலா வென்னுந்தன் மனைவிக்குத்
தந்திடும் ஒளியெனும் தனியொரு அணிகலன் !
எக்கால மானாலும் தீரா தொளிர்விடும்
இக்காதல் தன்னையு மொத்ததே
நானுனக்குச் சூட்டிடும் நற்கொலு சிதுவே !

-விவேக்பாரதி
26.09.2015

Comments

Popular Posts