கண்ணீரும் தித்திக்காதோ ?

சித்திரை மாதம் எனக்குக்
கல்யாணம் என்று சொன்னாய்
முத்துச்சிரிப்பு கண்டேன்
உன்முகத்தில்
முப்பது ஆண்டுக்குப் பின் !

சத்திரம் பார்க்கணும் என்றாய்
சாதகம் பொருத்தம் என்றாய்
வீட்டுப் பத்திரம் அடகு வைத்து
பணத்தையும் வாங்கி வந்தாய் !

சமையல் ஏற்பாடென்ன
பந்தல் அலங்காரம் என்ன
சுமைகள் பல இருந்தும்
சுகமாக என்னை வைத்தாய்

உன் இமையில் தூக்கம் தொலைத்தாய்
வேலைகள் ஆயிரம் என்றாய்
உமைப்போல் ஒரு உயிரை
கண்டதில்லை என்னுயிர் தாயே

மண்ணில் உள்ளோர் வியக்க
எனக்கு மணமுடித்து வைத்தாய்
விண்ணின் இறைவனைப் போல்
வாழ்த்துக்கள் தூவி விட்டாய்

பெண்ணாய்ப் பிறந்ததன் அர்த்தமும்
பல உண்மையும் சொல்லித் தந்தாய்
இந்தத் தருணத்தில்,
கண்ணில் வழியும் இந்தக்
கண்ணீரும் தித்திக்காதோ?

-விவேக்பாரதி
22.04.2014

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி