காதல் மனம்

வாடிக்கை விஷய மெல்லாம்
வேடிக்கை யாக மாற்றி
ஜோடித்த பொய்களையும்
பேச வைக்கும் காதல் மனம்!

மாடிக்கும் மேலே சென்று
ஆடிக் குதித்திருக்க
மூடி திறந்து விட்ட
பீர்போல் தான் காதல் மனம்!

நாடித் துடிப்புகளைத்
தேடி அலைய வைக்கும்
ஓடித் திரிய வைக்கும்
ஒரு மின்னல் காதல் மனம்!!

காதல் மனம் செய்யும்
மோதல் விளங்கிடவும்
நீதம் அறிந்திடவும்
நீளம் அளந்திடவும்

இதுவரைக்கும் முயன்றவர்கள்
இயக்கமற்று நிற்கையிலே
இதயத்துத் தேவதையே
இயற்றுவதும் எளிதாமோ?

காதல் மனம்!
கவிதை மனம்!
புரிதல் இல்லா
புதுமை இனம்!! '

-விவேக்பாரதி
24.04.2014Comments

Popular Posts