வெட்ட வெளித் திடல்

வெட்ட வெளித் திடலில் - தனியே
   நீயும் நானு மங்கே
சுட்ட கதைக ளெல்லாம் - பேசிக்
   களித்திருந்தோம் அழகே !
பட்டப் பகற் பொழுதில் - ஒரு
   வெண்ணிலா தோன்றிடுமேல்
வட்ட வடிவங் கொண்ட - உனது
   வண்ண முக்கத்தழகே !

வானுக் கிடையி னிலே! - ஒரு
   வழிதடம் நான் அமைத்து
தேனுக் கினியவளே  - உனைத்
   தூக்கிச் சென்றிடவோ ?
ஊனுக் குள்ளே உலகில் - நன்கு
   உயிர் வசிப்பதுபோல் !
மானுக் கிளையவளே - உன்னுள் 
   மண்டி இருந்திடவா ?

விவேக்பாரதி
21.04.2014

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி