காதலனும் காதலியும்

காதலன் :

காமத்தின் வில்கொண்டு என்னை அடித்தவளே 
மாமன் மகளே  மல்லிகையே  நீகேளாய் !
தாமரைப் பூவிலையில் தண்ணீர் இருப்பதுபோல்
கோமளமே என்மேலே இருந்துவிட்டால் என்னகுறை ?

காதலி :

காமத்தின் வில்கொண்டு உன்னை அடிதேனா ?
மாமனே மன்னனே இதென்ன பெரும்பொய்கள்
தாமரை பூவிலையின் தண்ணீர்போல் உன்மேலே
கோமளம்நான் இருந்துவிட்டால் நீசும்மா இருப்பாயோ ?

காதலன் :

சும்மாதான் நானிருப்பேன் சுண்டுவிரல் தீண்டாதே
தம்மாதூண்டு அளவும் என்மூச்சுன்மேல் படாதே
அம்மாள் சத்தியமடி  எல்லைகள் தாண்டமாட்டேன்
பொம்மை போல் நானிருப்பேன் காலடியில் !

காதலி :

சும்மாபொய் சொல்லாதே நானுந்தன் மேலிருந்தால்
அம்மா ஐயோவென்று அலறத்தான் வைத்திடுவாய்
கம்மென்று இருக்கமாட்டாய் கட்டுக்கோப்பு மீறிடுவாய்
உம்மால் பெரும்பாடு அய்யய்யோ வேண்டாமே !

-விவேக்பாரதி
22.04.2014

Comments

Popular Posts