Posts

Showing posts from October, 2017

சுகநிழல்

துயர்வந்து தூக்கத்தைத் தூரமாக்கும் போது       தூங்குதற்கு இடமேதடி   துஷ்டனைப் போல்வந்து நினைவென்னும் வேல்பாயத்       தூங்கிடற்கு இடமேதடி ? அயர்வான கண்ணோடும் அன்பான விரல்தேடி       அலைகின்ற நெஞ்சினோடும்   அழுதேங்கி வாழ்கின்ற இரவென்னும் மரணத்தில்       அமைபெறும் வழியேதடி ? கயலாடும் ஜாடியாய்க் கனவேந்தும் மூடியாய்க்       காலங்கள் போக்குகின்றேன்   கனியான நெஞ்சோடு கல்லடிகள் பட்டதால்       காயத்தில் வாடுகின்றேன் ! பயமென்ன உன்னிடம் பகர்தற்கு, நானென்றன்       பாதியை இழந்தேனடி  பக்குவம் கண்டிடும் வழிதேடி வழிதேடிப்       பாதையை இழந்தேனடி ! உள்சொல்லும் அர்த்தத்தை உணர்வோடு சொல்கையில்       உயர்வெனக் கருதுவாயோ ?   ஊமையென் நெஞ்சுக்குள் மூழ்கின்ற போர்களை       உன்னதக் கவியெனன்பாயோ ? கள்கூட வெள்ளையே கவலையில் கதறிடும்       கவிகூட அழகாகுமோ ?   கண்ணீரைச் சொல்லாக மொழிபெயர்க்கும் கவிஞன்       கதறல்கள் இசையாகுமோ  ? முள்ளொன்று நெஞ்சத்தை நோகப்பதம் பார்த்து       முழுவலியைக் காட்டும்நேரம்   மூச்சோடு கண்ணீரை நானும் அடக்கியே       முடியாமல் வாழுகின்றேன் ! சுள்ளென்ற கொடுவெய்யில் சுட்டதைப் போலவே        சுற்றிலும்

சுகநிழல்

துயர்வந்து தூக்கத்தைத் தூரமாக்கும் போது       தூங்குதற்கு இடமேதடி   துஷ்டனைப் போல்வந்து நினைவென்னும் வேல்பாயத்       தூங்கிடற்கு இடமேதடி ? அயர்வான கண்ணோடும் அன்பான விரல்தேடி       அலைகின்ற நெஞ்சினோடும்   அழுதேங்கி வாழ்கின்ற இரவென்னும் மரணத்தில்       அமைபெறும் வழியேதடி ? கயலாடும் ஜாடியாய்க் கனவேந்தும் மூடியாய்க்       காலங்கள் போக்குகின்றேன்   கனியான நெஞ்சோடு கல்லடிகள் பட்டதால்       காயத்தில் வாடுகின்றேன் ! பயமென்ன உன்னிடம் பகர்தற்கு, நானென்றன்       பாதியை இழந்தேனடி  பக்குவம் கண்டிடும் வழிதேடி வழிதேடிப்       பாதையை இழந்தேனடி ! உள்சொல்லும் அர்த்தத்தை உணர்வோடு சொல்கையில்       உயர்வெனக் கருதுவாயோ ?   ஊமையென் நெஞ்சுக்குள் மூழ்கின்ற போர்களை       உன்னதக் கவியெனன்பாயோ ? கள்கூட வெள்ளையே கவலையில் கதறிடும்       கவிகூட அழகாகுமோ ?   கண்ணீரைச் சொல்லாக மொழிபெயர்க்கும் கவிஞன்       கதறல்கள் இசையாகுமோ  ? முள்ளொன்று நெஞ்சத்தை நோகப்பதம் பார்த்து       முழுவலியைக் காட்டும்நேரம்   மூச்சோடு கண்ணீரை நானும் அடக்கியே       முடியாமல் வாழுகின்றேன் ! சுள்ளென்ற கொடுவெய்யில்

Tell them not

Oh wind! Let me tell you a secret! I'm crying inside! Tell them not! Otherwise they'll pinch More ball pins in my wound! Oh waves! Let me tell you a story Of a mindless poet Loses all his lucky charm And begging his goddesses For their mercy on him! Tell them not! Otherwise, they'll laugh at that poet Saying him mad! Oh finest sands Let me tell you my pains! Like yours Even my inside have got Lot of boot stampings! Tell them not! Otherwise, they'll search others footprints Forgetting to see thier's! If at all Loving and trusting my time Is a sin! Let me suffocate inside My errors bin! Oh vast sky! Tell them not! Otherwise they may come And examine my error bin Asif they're really a smart ass! So please Tell them not! I'm done with advises! -VivekBharathi 31.07.2017

நிகர்த்தவன்

"அஹம் பிரம்மாஸ்மி" நடத்திடும் கிளர்ச்சி !! ஞான சுதந்திரம் நாளும் படைத்தவன்       ஞாயிறை ஒத்தமுகம் - பெரும்   ஞாலம் இயக்கிடும் தேவி தமக்கொரு        நன்மகன் ஆதலினால் யானை முகத்தனும் வேலனும் அக்கறை       யாண்டும் இயற்றுவதால் - மலை   ஆலய மாபதி ஐயன் கரத்தினில்       அன்பைப் பதிப்பதனால் கானில் இருந்திடும் காலங் கொடுத்திடும்       கடமை அனுபவங்கள் - வரும்   கவிதையில் என்னுயிர் வனிதை எனத்திதழ்       காளி கொடுப்பதனால் ஜானகி ராமனின் அம்புகள்  ஒத்திடும்       சொற்கள் இருப்பதனால் - நான்   சாமி நிகர்த்தவன் பூமி புரப்பவன்       தேவர் இனத்தவனே ! ஆலயம்  ஒத்திடும் அன்பர்கள் நெஞ்சினை       ஆண்டு கிடப்பதனால் - என்   ஆற்றலிலே பல மாற்றம் படைத்திடும்       அற்புதம் செய்வதனால் மாலயன் அரனென மூவரின் செயலினை       மண்ணில் இயக்குவதால் - பலர்   மனமெனும் ஊரினில் கற்பனை யாய்ப் பல       மாயம் நிகழ்த்துவதால் காலமெ னுங்கதை என்னைப் படுத்திடக்       கடும்வலி காட்டுவதால் - ஒரு   கல்லெனத் தேகம் கனன்றெழும் ஆவியும்       காட்சி கொடுப்பதனால் ஜாலம் இயற்றிடும் சங்கரி என்குரல்       சாதகம் கேட்பதனால் - நான்   சாமி நிகர

நிகர்த்தவன்

"அஹம் பிரம்மாஸ்மி" நடத்திடும் கிளர்ச்சி !! ஞான சுதந்திரம் நாளும் படைத்தவன்       ஞாயிறை ஒத்தமுகம் - பெரும்   ஞாலம் இயக்கிடும் தேவி தமக்கொரு        நன்மகன் ஆதலினால் யானை முகத்தனும் வேலனும் அக்கறை       யாண்டும் இயற்றுவதால் - மலை   ஆலய மாபதி ஐயன் கரத்தினில்       அன்பைப் பதிப்பதனால் கானில் இருந்திடும் காலங் கொடுத்திடும்       கடமை அனுபவங்கள் - வரும்   கவிதையில் என்னுயிர் வனிதை எனத்திதழ்       காளி கொடுப்பதனால் ஜானகி ராமனின் அம்புகள்  ஒத்திடும்       சொற்கள் இருப்பதனால் - நான்   சாமி நிகர்த்தவன் பூமி புரப்பவன்       தேவர் இனத்தவனே ! ஆலயம்  ஒத்திடும் அன்பர்கள் நெஞ்சினை       ஆண்டு கிடப்பதனால் - என்   ஆற்றலிலே பல மாற்றம் படைத்திடும்       அற்புதம் செய்வதனால் மாலயன் அரனென மூவரின் செயலினை       மண்ணில் இயக்குவதால் - பலர்   மனமெனும் ஊரினில் கற்பனை யாய்ப் பல       மாயம் நிகழ்த்துவதால் காலமெ னுங்கதை என்னைப் படுத்திடக்       கடும்வலி காட்டுவதால் - ஒரு   கல்லெனத் தேகம் கனன்றெழும் ஆவியும்       காட்சி கொடுப்பதனால் ஜாலம் இயற்றிடும் சங்கரி என்குரல்       சாதகம

தேவையில்லை

யாருக்கும் நான்தேவை இல்லை - இன்று      யாழ்தேடி வாசிக்கும் ஆள்யாரும் இல்லை போருக்குத் தாள்தேவை இல்லை - பொழுது      போக்கிற்குப் பாதேவை போதத்திற்கு இல்லை ! பூவுக்குத்  தேன்தேவை இல்லை - இந்தப்       பூமிக்கு மென்மைகொள் மனம்தேவை இல்லை ஆவுக்குக் கறிதேவை இல்லை - பெரும்      ஆழிக்குக் குட்டைநீர் அதுதேவை இல்லை ! தேவையில் லாதவை எல்லாம் - இந்தத்      தேசத்தில் தீமேவி எரியோடிச் செல்க தேவைகள் மட்டுமே வாழ்க - என்றும்      தேவைக்கு வாழ்பவர் தேகங்கள் வாழ்க ! -விவேக்பாரதி 31.07.2017

எட்டிய சாரம்

நடித்திடநான் பழகிவிட்டேன் நாளெல்லாம் பழகிவிட்டேன்    நாளுமொரு கவலையிலை என்றே - என்    நல்லசொற்கள் சொல்லிடுமே இன்றே - பல அடிவாங்கிப் பழகிவிட்டேன் ஆடியாடி அறிந்துவிட்டேன்    அகம்மூடப் பழகிவிட்டேன் முன்பே - என்    அடையாளம் மறைத்துவிட்டேன் பின்பே ! நாளெல்லாம் நாடகமாய் நாம்வாழும் பூமியிலே    நல்லவரைத் தேடுவதை விட்டேன் - அட    நானும்கூட தீவினையால் பட்டேன் - இனி வேளையெலாம் நான்செய்யும் வேலையொன்றே போதுமென்று    வேஷமிடக் கூடவழி கற்றேன் ! - என்    வேதனையை நான்மறைத்த லுற்றேன் ! ஆடுகின்ற மனப்பேயை அடக்கிவிட வழிதேடி    அனுபவமே அந்தவழி கண்டேன் - அதை    அடையுவழி எனமௌனம் கொண்டேன் - பொருள் தேடுவதே மனிதகுணம் தேடவைப்ப திறைவன்மனம்    தேடுதலை விட்டொழிக்க வந்தேன் - என்    தேவையெலாம் அவனிடத்தில் தந்தேன் ! மேலிருக்கும் வேளைவரை கீழிருக்கும் மூடமனம்    மேன்மைகளை ஏற்றுவிடத் தோற்கும் - அது    மேலும்படி கீழிறங்கப் பார்க்கும் - வரும் தோலிறுக்கம் நேரும்வரை ஓர்குழியில் வீழும்வரை    தோன்றுவதே இல்லையுயர் ஞானம் - அது     தோன்றிவிட்டால் போய்விடுமே மானம் ! முன்னிலையில் புகழுபவர் பின்னிருந்தால் இகழுவதை    முழுவதுமாய் நேரில்

எட்டிய சாரம்

நடித்திடநான் பழகிவிட்டேன் நாளெல்லாம் பழகிவிட்டேன்    நாளுமொரு கவலையிலை என்றே - என்    நல்லசொற்கள் சொல்லிடுமே இன்றே - பல அடிவாங்கிப் பழகிவிட்டேன் ஆடியாடி அறிந்துவிட்டேன்    அகம்மூடப் பழகிவிட்டேன் முன்பே - என்    அடையாளம் மறைத்துவிட்டேன் பின்பே ! நாளெல்லாம் நாடகமாய் நாம்வாழும் பூமியிலே    நல்லவரைத் தேடுவதை விட்டேன் - அட    நானும்கூட தீவினையால் பட்டேன் - இனி வேளையெலாம் நான்செய்யும் வேலையொன்றே போதுமென்று    வேஷமிடக் கூடவழி கற்றேன் ! - என்    வேதனையை நான்மறைத்த லுற்றேன் ! ஆடுகின்ற மனப்பேயை அடக்கிவிட வழிதேடி    அனுபவமே அந்தவழி கண்டேன் - அதை    அடையுவழி எனமௌனம் கொண்டேன் - பொருள் தேடுவதே மனிதகுணம் தேடவைப்ப திறைவன்மனம்    தேடுதலை விட்டொழிக்க வந்தேன் - என்    தேவையெலாம் அவனிடத்தில் தந்தேன் ! மேலிருக்கும் வேளைவரை கீழிருக்கும் மூடமனம்    மேன்மைகளை ஏற்றுவிடத் தோற்கும் - அது    மேலும்படி கீழிறங்கப் பார்க்கும் - வரும் தோலிறுக்கம் நேரும்வரை ஓர்குழியில் வீழும்வரை    தோன்றுவதே இல்லையுயர் ஞானம் - அது     தோன்றிவிட்டால் போய்விடுமே மானம் ! முன்னிலையில் புகழுபவர் பின்னிருந்தால் இகழு

எனக்கே என்னை

எனக்கே என்னைத் தெரியாது - இதில்    எப்படி உன்னை நானறிவேன் ? மனத்தை அடக்கத் தெரியாது - உன்    மாநிழல் எந்த நாளடைவேன் ? இருளுக்கும் பகலுக்கும் பேதமுண்டு - என்    இருவிழியில் எங்கிலும் போதையுண்டு பொருளுக்கு வாடிடும் கவிஞனுண்டு - ஒரு    பொலிவுக்குப் பாடிடும் குயிலுமுண்டு ! அருளுக்கு நின்பதம் தேடுகிறேன் - என்    ஆன்மாவின் சத்தத்தில் பாடுகிறேன் தெருவுக்குள் வாழ்கின்ற தேரையைய்யா - என்    தேவைக்குக் கேட்பதும் யாரையையா ? பொழுதுக்குத் தூக்கங்கள் தொடுவதில்லை - எனைப்    பொறையென்னும் கைவந்து தடுப்பதில்லை அழுதற்கும் வழியின்றிப் பாடுகின்றேன் - என்    அவமானக் காயத்தில் கூடுகின்றேன் ! எழுதற்குத் தடியொன்று வேண்டுமென்றே - நான்    எப்போதும் நினைத்திங்கு வீழுகின்றேன் கழுத்துக்கு மேல்பாரம் ஏறியதால் - ஒரு    கணம்கூட நிமிராமல் வாடுகின்றேன் ! என்பேச்சு மூச்செலாம் யார்தந்தது - தாய்    எனக்கிந்த புவிவாழ்வை ஏன்தந்தனள் என்றெல்லாம் எண்ணிடக் கதறுகின்றேன் - என்    எழுத்தோடு முணர்வில்லை பதறுகின்றேன் துன்பத்தில் இன்பத்தைக் கண்டகம்பன் - சொல்    துவளாமல் நாள்தோறும் ஓதுகின்றேன் அன்பிற்கு நானேங்கி வாழுகின்றேன் - என்    அடி

எனக்கே என்னை

எனக்கே என்னைத் தெரியாது - இதில்    எப்படி உன்னை நானறிவேன் ? மனத்தை அடக்கத் தெரியாது - உன்    மாநிழல் எந்த நாளடைவேன் ? இருளுக்கும் பகலுக்கும் பேதமுண்டு - என்    இருவிழியில் எங்கிலும் போதையுண்டு பொருளுக்கு வாடிடும் கவிஞனுண்டு - ஒரு    பொலிவுக்குப் பாடிடும் குயிலுமுண்டு ! அருளுக்கு நின்பதம் தேடுகிறேன் - என்    ஆன்மாவின் சத்தத்தில் பாடுகிறேன் தெருவுக்குள் வாழ்கின்ற தேரையைய்யா - என்    தேவைக்குக் கேட்பதும் யாரையையா ? பொழுதுக்குத் தூக்கங்கள் தொடுவதில்லை - எனைப்    பொறையென்னும் கைவந்து தடுப்பதில்லை அழுதற்கும் வழியின்றிப் பாடுகின்றேன் - என்    அவமானக் காயத்தில் கூடுகின்றேன் ! எழுதற்குத் தடியொன்று வேண்டுமென்றே - நான்    எப்போதும் நினைத்திங்கு வீழுகின்றேன் கழுத்துக்கு மேல்பாரம் ஏறியதால் - ஒரு    கணம்கூட நிமிராமல் வாடுகின்றேன் ! என்பேச்சு மூச்செலாம் யார்தந்தது - தாய்    எனக்கிந்த புவிவாழ்வை ஏன்தந்தனள் என்றெல்லாம் எண்ணிடக் கதறுகின்றேன் - என்    எழுத்தோடு முணர்வில்லை பதறுகின்றேன் துன்பத்தில் இன்பத்தைக் கண்டகம்பன் - சொல்    துவளாமல் நாள்தோறும் ஓதுகின்றேன் அன்பிற்கு நானேங்கி

How I

I remember you Like the first flash That hit my face When I stepped out in rain ! I remember you Like a flower vase That gathers all my feelings And make as flowers ! I remember you Like my first spoken word In a very big show The first word of my poem ! I remember you Like my paradise Where I often wished to Travel alone ! If remembering is a Key for loving more ! Your memories are my key To my Euphoria !! -VivekBharathi 27.07.2017

அப்துல் கலாம் ஒருபா ஒருபஃது

தானாய் உதித்துத் தரணி முழுவதும்  வானாய் வளர்ந்துன்றன் வாக்காலே - காணாத  மாற்றங்கள் செய்ய மனக்கனவு கண்டவனே ! ஏற்றுகின்றோம் உன்னை எடுத்து !  எடுத்த பிறப்பும் எதற்கென்(று) அறியா(து)  உடுக்கை உறக்கம் உணவென்(று) - இடர்க்குள்  வாழும் மனிதரிடை வந்த விடிவெள்ளி  தாழும் உமக்கெம் தலை !  தலையில் அறிவேற்றித் தண்மை மனத்தில்  நிலையாய் நிறுத்தி ! நிஜமாய்க் - கலைகாட்டி  நாட்டையும் நாட்டுமக்கள் நம்பிக்கை யும்வென்ற  பாட்டையைச் சொல்லுமெம் பாட்டு !  பாட்டுக்கும் கூத்துக்கும் பாழும் இளைஞர்குலம்  நாட்டத்தைக் காட்டி நலிகையிலே - ஈட்டிமுனை  ஏவுகணை காட்டி அறிவியலில் நாட்டத்தை  மேவு(ம்)வகை செய்தவினை மேல் !  மேல்வானை ஆண்ட மெலிவான மாந்தர்கள்  சூல்கொண்ட விண்ணின் சுடராள - நூல்கொண்ட நுண்ணறிவால் பல்வித்தை நல்கி நகர்ந்தாயே  பண்ணறிவும் கண்டோம் பணிந்து !  பணிவே மனங்கொண்டாய் பாசமே வீசும்  குணமே உடையாய் குலையா(து) - அணிசேர்த்(து)  அழியா வலிமையுடன் அக்னிச் சிறகை  எழிலாய் விரித்தாய் எழுந்து !  எழுப்பிக் கனவை எழிலாகக் காண  முழுதாய் எமையே முடுக்கி - விழுந்தால்  விதையென்(று) உரைத்து விசைதந்து சென்ற  கதைசொல்லும் எங்கள் கனவு !  கன

அப்துல் கலாம் ஒருபா ஒருபஃது

தானாய் உதித்துத் தரணி முழுவதும்  வானாய் வளர்ந்துன்றன் வாக்காலே - காணாத  மாற்றங்கள் செய்ய மனக்கனவு கண்டவனே ! ஏற்றுகின்றோம் உன்னை எடுத்து !  எடுத்த பிறப்பும் எதற்கென்(று) அறியா(து)  உடுக்கை உறக்கம் உணவென்(று) - இடர்க்குள்  வாழும் மனிதரிடை வந்த விடிவெள்ளி  தாழும் உமக்கெம் தலை !  தலையில் அறிவேற்றித் தண்மை மனத்தில்  நிலையாய் நிறுத்தி ! நிஜமாய்க் - கலைகாட்டி  நாட்டையும் நாட்டுமக்கள் நம்பிக்கை யும்வென்ற  பாட்டையைச் சொல்லுமெம் பாட்டு !  பாட்டுக்கும் கூத்துக்கும் பாழும் இளைஞர்குலம்  நாட்டத்தைக் காட்டி நலிகையிலே - ஈட்டிமுனை  ஏவுகணை காட்டி அறிவியலில் நாட்டத்தை  மேவு(ம்)வகை செய்தவினை மேல் !  மேல்வானை ஆண்ட மெலிவான மாந்தர்கள்  சூல்கொண்ட விண்ணின் சுடராள - நூல்கொண்ட நுண்ணறிவால் பல்வித்தை நல்கி நகர்ந்தாயே  பண்ணறிவும் கண்டோம் பணிந்து !  பணிவே மனங்கொண்டாய் பாசமே வீசும்  குணமே உடையாய் குலையா(து) - அணிசேர்த்(து)  அழியா வலிமையுடன் அக்னிச் சிறகை  எழிலாய் விரித்தாய் எழுந்து !  எழுப்பிக் கனவை எழிலாகக் காண  முழுதாய் எமையே முடுக்கி - விழுந்தால்  விதையென்(று) உரைத்து விசைதந்து சென்ற  கதைசொல்லும் எங்கள் கனவு !  க

சக்தித் திரி

கையிற் கரும்புடனே - அருட்     கண்ணில் ஒளியுடனே மெய்யில் நகையுடனே - உயிர்     மெய்யின் சுடரெனவே வையகச் சக்தியினாள் - இவண்     வந்ததைக் காணுகையில் தைய்யன தாவெனவே - கவிதை     தத்திப் பெருகாதோ ? அன்னங் கொடுப்பவளை - மனத்தின்     அச்ச மறுப்பவளை உன்னற் கெளியவளை - உயிருள்     ஊறிக் கிடப்பவளை மின்னற் சுவைகொடுத்தே - கொஞ்சமாய்     மிரள வைப்பவளை என்றும் பணிவமெனில் - நம்முளே     ஏற்றம் வளராதோ ? பாதி நிலாவுடுத்தி - அருளைப்     பார்வை தனிலிருத்தி ஆதிப் பரம்பொருளாய் - புதுமை     ஆறு கரத்தினளாய் காதல் வளர்த்திடுவாள் - அம்மா     காமேஸ் வரியவளை ஓதிப் புகழ்வமெனில் - நம்முள்     ஒழுக்கம் நேராதோ ? சக்தி ஒருமையினாள் - பல     சாற்றும் வகைமையினாள் ! முக்தி தருமுனமே - நமை     முயல வைத்திடுவாள் ! சக்தி நெருப்பாவாள் - அதில்     சாந்தம் பிறக்குமடா ! பக்தி திரியாயின் - அதில்     பார்ப்ப திவளுருவே !! -விவேக்பாரதி 25.07.2017

Lock

Lock your thoughts With poetry Lock your friendship With chatting Lock your love With sharing Lock your lifespan With exercise ! But Don't lock your emotions ! Because, Rain come just to fall ! So as emotions !! -VivekBharathi 24.07.2017

என் இடம்

எனக்கும் இடமுண்டு - தமிழ் எழுப்பும் கவிஞர் மனமே டையிலே மனத்தில் கவிதை மணம்வீசும் - இம்     மழலை மொழியில் இறைபேசும் - வரும் தினத்தில் எந்தப் பொழுதினிலும் - கவித்     தீபம் ஜொலிக்கும் என்தேசம் ! அறிவில் தோன்றிய கலையாகும் - இது     அருளில் ஏற்றிய உலையாகும் - உயர் நெறியில் லாதோர் காட்டாறு - என்     நெஞ்சில் ஓடி விளையாடும் ! பாலன் சொல்லில் பலமுண்டு - சம்     பந்தன் பாரதி காட்டுண்டு - இது காலம் எழுதிய தீர்ப்பாகும் - இக்     காயம் அதிலே சேர்ப்பாகும் ! -விவேக்பாரதி 22.07.2017

கண்ணம்மா

சின்னஞ் சிறுவயதில் - வந்து     சீறும் கனவுகளில்  என்னைப் படுத்திடுவாள் - கவி     எழுத்து உரு கொண்டிடுவாள்  இன்னும் வளர்ந்திடவே - உரு     இயக்கம் மாற்றிவிட்டாள்  கன்னி வடிவானாள் - நான்     காதலும் கொண்டுவிட்டேன் !  பாட்டைப் பிதற்றிடிடினும் - பல     பாடம் புகட்டிடினும்  சேட்டை நிகழ்த்திடினும் - சினம்     சேரா உயர் அகத்தாள்  ஓட்டை எங்கு கண்டாள் - மனது      ஓரம் அமர்ந்து கொண்டாள்  நீட்டும் நினைவினிலே - எனை      நித்தம் நனைத்திடுவாள் !  காதலில் தொட்டுவிட்டால் - கொஞ்சும்     கண்ணில் முரண்பிடிப்பாள்  மோதலில் விட்டுவிட்டால் - வந்து     முதலில் அரவணைப்பாள்  பாதியில் வந்தவள் தான் - என்     பாதி என்றாகி விட்டாள்  ஆதியில் வந்திருந்தால் - உயிர்     அனைத்தும் கொண்டிருப்பாள் !  விட்டுப் பிரிவம் என்றால் - உயிர்     வீங்கி வியர்த்திருப்பாள்  கட்டித் தழுவச் சொன்னால் - உடன்      காதல் கொடுத்திடுவாள்  சொட்டும் அமுதத்தினை - இதழ்     சொப்பில் வழங்கிடுவாள்  ஒட்டி உயிர்வளர்வாள் - என்     ஒருநிழல் ஆகிடுவாள் !  என்னை அறிந்திடுவாள் - பழி     ஏறும் பொழுதினிலே  முன்னம் எனைக் காப்பாள் - பகை      மூளும் வகை தீர்ப்பா

கண்ணம்மா

சின்னஞ் சிறுவயதில் - வந்து     சீறும் கனவுகளில்  என்னைப் படுத்திடுவாள் - கவி     எழுத்து உரு கொண்டிடுவாள்  இன்னும் வளர்ந்திடவே - உரு     இயக்கம் மாற்றிவிட்டாள்  கன்னி வடிவானாள் - நான்     காதலும் கொண்டுவிட்டேன் !  பாட்டைப் பிதற்றிடிடினும் - பல     பாடம் புகட்டிடினும்  சேட்டை நிகழ்த்திடினும் - சினம்     சேரா உயர் அகத்தாள்  ஓட்டை எங்கு கண்டாள் - மனது      ஓரம் அமர்ந்து கொண்டாள்  நீட்டும் நினைவினிலே - எனை      நித்தம் நனைத்திடுவாள் !  காதலில் தொட்டுவிட்டால் - கொஞ்சும்     கண்ணில் முரண்பிடிப்பாள்  மோதலில் விட்டுவிட்டால் - வந்து     முதலில் அரவணைப்பாள்  பாதியில் வந்தவள் தான் - என்     பாதி என்றாகி விட்டாள்  ஆதியில் வந்திருந்தால் - உயிர்     அனைத்தும் கொண்டிருப்பாள் !  விட்டுப் பிரிவம் என்றால் - உயிர்     வீங்கி வியர்த்திருப்பாள்  கட்டித் தழுவச் சொன்னால் - உடன்      காதல் கொடுத்திடுவாள்  சொட்டும் அமுதத்தினை - இதழ்     சொப்பில் வழங்கிடுவாள்  ஒட்டி உயிர்வளர்வாள் - என்     ஒருநிழல் ஆகிடுவாள் !  என்னை அறிந்திடுவாள் - ப

பக்கம் இருப்பதில்

பக்கம் இருப்பதில் வெட்கமென்ன ? - அடி    பஞ்சுக் கன்னம்தர அச்சமென்ன ? சிக்கல் மனதுக்குள் நிற்பதென்ன - இரு    ஜீவன் கலந்தபின் துக்கமென்ன ? பட்டுத் தலையணை பக்கத்திலே - உடன்    பாலும் பழங்களும் பக்கத்திலே தொட்டுக் கொள்ளமட்டும் தூரமென்ன ? - அடி    தோள்கள் இணைந்தபின் பாரமென்ன ? மீனும் நிலவுமே பக்கத்திலே - அவை    மீட்டும் இரவிசை பக்கத்திலே நானும் கவிதையும் எட்டுவதோ ? - என்    நங்கை தனிமையில் தட்டுவதோ ? நீரும் தவளையும் பக்கத்திலே - அதில்    நீந்தும் கயல்களும் பக்கத்திலே தீரும் பொழுதுகள் செல்லுவதோ ? - நீ    திண்ண மௌனத்தைச் சொல்லுவதோ ? -விவேக்பாரதி 19.07.2017

Race

Every time I write There starts a race ! There will be a race Between words To reach my conscious To get used ! There will be a race Between feelings To crawl upon me To be pampered ! There will be a race Between thoughts To fill my poem To be praised ! These races happens Every time I write And every time we love ! -Vivekbharathi 19.07.2017

மதிக்கும் முடிவு

நீந்துகின்ற வெண்ணிலா    நீ வரைந்த பொம்மையோ ? பூந்தளிர்கள் வாசனை    பூத்ததுன்றன் பெண்மையோ ? ஏந்துகின்ற காதலை    எழுதி வைத்துச் செல்லவோ ? மாந்துகின்ற வண்டு நான்    மலர்கள் நீயிங் கல்லவோ ? வலிகளை மறைக்கவோ ?    வார்த்தையில் சிரிக்கவோ ? நலமிழந்த நாடுபோல்    நல்லதாய் நடிக்கவோ ? குலமுயர்த்தக் காதலைக்    குப்பை தன்னில் கொட்டினோம் ! உலகில் நம்மைப் போலயார் ?    உளறு கின்றேன் அல்லவோ ? இரவு குத்தி சாகிறேன் !    இதயமற்று போகிறேன் ! மரணம் தொட்ட வேதனை    மனதில் எங்கும் காண்கிறேன் ! நிரம்புகின்ற நெஞ்சிலே    நினைவுத் தீயில் வேகிறேன் ! வரவழைத்த துன்பத்தை    வாழ்க்கையில் சுமக்கிறேன் ! நான் வளர்த்த காதலை    நான் புதைக்க நேர்வதோ ? தேன் வளர்த்த பூக்களைத்    தேள்கள் கொட்டிச் சாய்ப்பதோ ? ஏன் எதற்குக் காதலோ ?    ஏன் எனக்கும் நேர்ந்ததோ ? ஊன் கிழிக்கும் பிரிவினை    உயிர் கிழித்துப் போவதோ ? யாரை நானும் சாடினேன் ?    யாதை நோக்கி ஓடினேன் ? போரையா விரும்பினேன் ?    போதையா இக் காதலும் ? மாரை விட்டு ஜீவனும்    வானம் நோக்கிப் பாயுதே ! கோரமான காலந்தான்    கோலச் சிரிப்பில் துள்ளுதே ! என்னையே எரிக்குதே    என்னை விடவும் மெ

மதிக்கும் முடிவு

நீந்துகின்ற வெண்ணிலா    நீ வரைந்த பொம்மையோ ? பூந்தளிர்கள் வாசனை    பூத்ததுன்றன் பெண்மையோ ? ஏந்துகின்ற காதலை    எழுதி வைத்துச் செல்லவோ ? மாந்துகின்ற வண்டு நான்    மலர்கள் நீயிங் கல்லவோ ? வலிகளை மறைக்கவோ ?    வார்த்தையில் சிரிக்கவோ ? நலமிழந்த நாடுபோல்    நல்லதாய் நடிக்கவோ ? குலமுயர்த்தக் காதலைக்    குப்பை தன்னில் கொட்டினோம் ! உலகில் நம்மைப் போலயார் ?    உளறு கின்றேன் அல்லவோ ? இரவு குத்தி சாகிறேன் !    இதயமற்று போகிறேன் ! மரணம் தொட்ட வேதனை    மனதில் எங்கும் காண்கிறேன் ! நிரம்புகின்ற நெஞ்சிலே    நினைவுத் தீயில் வேகிறேன் ! வரவழைத்த துன்பத்தை    வாழ்க்கையில் சுமக்கிறேன் ! நான் வளர்த்த காதலை    நான் புதைக்க நேர்வதோ ? தேன் வளர்த்த பூக்களைத்    தேள்கள் கொட்டிச் சாய்ப்பதோ ? ஏன் எதற்குக் காதலோ ?    ஏன் எனக்கும் நேர்ந்ததோ ? ஊன் கிழிக்கும் பிரிவினை    உயிர் கிழித்துப் போவதோ ? யாரை நானும் சாடினேன் ?    யாதை நோக்கி ஓடினேன் ? போரையா விரும்பினேன் ?    போதையா இக் காதலும் ? மாரை விட்டு ஜீவனும்    வானம் நோக்கிப் பாயுதே ! கோரமான காலந்தான்    கோலச் சிரிப்பில் துள்ளுதே ! என்னையே எரிக்குதே    என்னை விடவும்

இளைஞர் வாழ்க

இளமை கொண்டவர்கள் வாழ்கவே - வாழ்கவாழ்க     இளமை கொண்டவர்கள் வாழ்கவே ! வளமை ஆக்கவந்த மக்களாம் - வாழ்கவாழ்க     வலிப டைத்தவர்கள் வாழ்கவே ! கனவு காணுங்கண்கள் வாழ்கவே - உயருதற்குக்     கடமை ஆற்றுங்கைகள் வாழ்கவே ! மனதில் அச்சமற்ற வீரர்கள் - பூமியெங்கும்     மணம்ப ரப்பிநீடு வாழ்கவே ! வேட்கை கொண்டநெஞ்சர் வாழ்கவே - சூழுகின்ற     வேத னையெரித்து வாழ்கவே ! பாட்டி சைக்ககுமிதழ்கள் வாழ்கவே - கல்விகற்று     பாரு யர்த்தும்வர்க்கம் வாழ்கவே ! காதல் பேணுமக்கள் யாவரும் - இன்பமுற்று     கவிதை போலமண்ணில் வாழ்கவே ! நீதி நேர்மைகொண்டு வாழ்ந்திடும் - இளைஞரென்றும்     நீடு வாழ்கவாழ்க வாழ்கவே ! எச்ச ரிக்கைகொண்ட மானுடர் - நல்லவார்த்தை     எழுத மண்ணில்நன்கு வாழ்கவே ! மெச்சு தற்குமுரிய சக்தியாம் - இளைஞரென்னும்     மேன்மை யாளர்வாழ்க வாழ்கவே ! -விவேக்பாரதி 14.07.2017

தீரா வேட்கை

Image
  போராளி ஒருவனது சிந்த னைகள்     போகாமல் காற்றினிலே நிலைத்தி ருக்கும் ! தீராத வேட்கையினோ(டு) இருக்கும் சிந்தை     திண்ணமுடன் அதையேற்று வழி நடத்தும் ! வீராதி வீரரெலாம் இறப்ப தில்லை !     வித்தகர்கள் ஒருபொழுதும் மாள்வ தில்லை ! ஆராத சினமில்லை என்பதைப் போல்     அழியாத வேட்கைகள் அழிவ தில்லை ! மரணத்தை வெல்கின்ற வழியைத் தேடி     மக்களெலாம் ஏங்குகின்றார் ! மரணம் நேரும் தருணத்தில் அஞ்சாமை வெல்வதாகும் !     தம்முடல் தான் காலத்தால் பிறிந்திட் டாலும் உரைக்கின்ற சொற்களாலும் கொள்கை யாலும்     உலகத்தில் வாழ்பவரே மரணம் வெல்வார் ! இருக்கின்ற வரை உண்மை புரிவ தில்லை !     இங்கெடுத்துச் சொன்னாலும் கேட்ப தில்லை ! -விவேக்பாரதி 13.07.2017