என் இடம்

எனக்கும் இடமுண்டு - தமிழ்
எழுப்பும் கவிஞர் மனமே டையிலே

மனத்தில் கவிதை மணம்வீசும் - இம்
    மழலை மொழியில் இறைபேசும் - வரும்
தினத்தில் எந்தப் பொழுதினிலும் - கவித்
    தீபம் ஜொலிக்கும் என்தேசம் !

அறிவில் தோன்றிய கலையாகும் - இது
    அருளில் ஏற்றிய உலையாகும் - உயர்
நெறியில் லாதோர் காட்டாறு - என்
    நெஞ்சில் ஓடி விளையாடும் !

பாலன் சொல்லில் பலமுண்டு - சம்
    பந்தன் பாரதி காட்டுண்டு - இது
காலம் எழுதிய தீர்ப்பாகும் - இக்
    காயம் அதிலே சேர்ப்பாகும் !

-விவேக்பாரதி
22.07.2017

Popular Posts