காலை பிறக்கிறது
காலை பிறக்கிறது ! - அட
நானும் தான்
அலையில் லாதோர் அழகிய நதியென்
அகத்தில் பாய்கிறது ! - மனம்
அழிந்து மாய்கிறது ! - பெரு
மலைபோ லெழுந்த சூரியக் கிரணம்
மண்ணை ஒளிர்ப்பதுபோல் - என்
மதியை ஒளிர்க்கிறது !
நானும் தான்
அலையில் லாதோர் அழகிய நதியென்
அகத்தில் பாய்கிறது ! - மனம்
அழிந்து மாய்கிறது ! - பெரு
மலைபோ லெழுந்த சூரியக் கிரணம்
மண்ணை ஒளிர்ப்பதுபோல் - என்
மதியை ஒளிர்க்கிறது !
நிலையில் லாமல் ஓடிடும் காலம்
நீதி யுரைக்கிறது ! - உயிர்
நீளம் கரைக்கிறது ! - உயர்
கலையா மிந்தக் கவிதைகள் பட்டுக்
கண்கள் திறக்கிறது ! - அதிலே
கவலை பறக்கிறது !
எவனோ ஒருவன் தீட்டிடும் கணக்கில்
எல்லாம் நடக்கிறது ! - உடல்
ஏங்கிக் கடக்கிறது ! - அது
அவனோ ? அவளோ ? அறிவின் இயலோ ?
ஆழ்மதி கேட்கிறது ! - மெய்யை
ஆட்கொளப் பார்க்கிறது !
திவலை போலே வயதும் கசியத்
தினமும் உதிக்கிறது ! - உடல்
திமிரிக் குதிக்கிறது ! - ஒரு
கவணின் கல்லாம் கவிதைகள் பட்டுக்
கண்கள் திறக்கிறது - அதிலே
கவலை பறக்கிறது !
நான்யார் நீயார் நடுவே இவர்யார்
ஞானம் கேட்கிறது - சில
நாளில் தோற்கிறது ! - சுடர்
வான்கொள் ஒளியை மண்ணின் துகள்கள்
வாழ்த்திப் பூக்கிறது ! - அதன்
வாழ்த்தைக் கேட்கிறது !
மான்போல் மீன்போல் மருளும் சிந்தனை
மாற்றி அடிக்கிறது - உரு
மாறித் துடிக்கிறது - சுவைத்
தேன்போல் கவிதைத் திரள்கள் பட்டுத்
தேகம் பறக்கிறது - அதிலென்
காலை பிறக்கிறது !
-விவேக்பாரதி
30.03.2017
நீதி யுரைக்கிறது ! - உயிர்
நீளம் கரைக்கிறது ! - உயர்
கலையா மிந்தக் கவிதைகள் பட்டுக்
கண்கள் திறக்கிறது ! - அதிலே
கவலை பறக்கிறது !
எவனோ ஒருவன் தீட்டிடும் கணக்கில்
எல்லாம் நடக்கிறது ! - உடல்
ஏங்கிக் கடக்கிறது ! - அது
அவனோ ? அவளோ ? அறிவின் இயலோ ?
ஆழ்மதி கேட்கிறது ! - மெய்யை
ஆட்கொளப் பார்க்கிறது !
திவலை போலே வயதும் கசியத்
தினமும் உதிக்கிறது ! - உடல்
திமிரிக் குதிக்கிறது ! - ஒரு
கவணின் கல்லாம் கவிதைகள் பட்டுக்
கண்கள் திறக்கிறது - அதிலே
கவலை பறக்கிறது !
நான்யார் நீயார் நடுவே இவர்யார்
ஞானம் கேட்கிறது - சில
நாளில் தோற்கிறது ! - சுடர்
வான்கொள் ஒளியை மண்ணின் துகள்கள்
வாழ்த்திப் பூக்கிறது ! - அதன்
வாழ்த்தைக் கேட்கிறது !
மான்போல் மீன்போல் மருளும் சிந்தனை
மாற்றி அடிக்கிறது - உரு
மாறித் துடிக்கிறது - சுவைத்
தேன்போல் கவிதைத் திரள்கள் பட்டுத்
தேகம் பறக்கிறது - அதிலென்
காலை பிறக்கிறது !
-விவேக்பாரதி
30.03.2017