முதல் மேடை
மகிழ்வான மேடை ! நல்ல
மரபுதமிழ் பூக்க ளாகி
முகிழ்கின்ற மேடை ! ஆழி
முத்தாகக் கவிதை ஆழ்ந்தே
அகழ்கின்ற மேடை ! அந்த
அறிவாளர் மேடை தன்னில்
நகங்கூட வளராச் சேயை
நடிக்கவிட்டென் இறைவி பார்த்தாள் !
சுழற்றிவிட்டு சாட்டை பார்க்கச்
சும்மாபம் பரந்தான் நிற்கும் ??
கழற்றிவிட்டுப் பார்த்தால் காளைக்
கன்றென்ன நடந்தா செல்லும் ??
குழவியிட மினிப்பைக் காட்டிக்
குதித்துநீ பெறுவாய் என்றால்
அழத்தொடங்கி அதுவா செல்லும் ??
அதனைப்போல் நானு மங்கே !
சுற்றிவிட்டாள் சுழன்று போகச்
சொடுக்கிவிட்டாள் அதிர்ந்து போகக்
கற்றவைகள் யாவுங் காட்டி
கலைஞானத் திமிருங் காட்டிக்
கொற்றவனைப் போலே தூவல்
கொண்டேன்நான் கவிதை யாத்தேன் !
அற்புதமாய் அன்னாள் என்னை
அணைத்துடனே முத்தந் தந்தாள் !
நிறுத்தடி என்றேன் ! தேவீ !
நின்றனென் என்று சொல்லி
நிறுத்திய கார ணத்தின்
நிஜந்தனை உரைக்கச் சொன்னாள் !
இறுக்கியே கட்டி என்னை
இப்படிக் கொஞ்சும் முன்பு
வறுத்ததேன் சொல்லாய் என்றேன்
வளநகை சிரிக்க லானாள் !
"விடியலை உவப்ப தெல்லாம்
விலகிடா இருளின் பின்பே
வடிவெழில் சிலைக ளெல்லாம்
வலியுளி நுகர்ந்த பின்பே !
மிடிமையைக் கண்ட பின்தான்
மிளிர்வதுஞ் சுகமாய்த் தோன்றும் !
விடுவிடு கவலை வாவா" !
வென்றவள் அணைத்துக் கொண்டாள் !
-விவேக்பாரதி
28.08.2016
மரபுதமிழ் பூக்க ளாகி
முகிழ்கின்ற மேடை ! ஆழி
முத்தாகக் கவிதை ஆழ்ந்தே
அகழ்கின்ற மேடை ! அந்த
அறிவாளர் மேடை தன்னில்
நகங்கூட வளராச் சேயை
நடிக்கவிட்டென் இறைவி பார்த்தாள் !
சுழற்றிவிட்டு சாட்டை பார்க்கச்
சும்மாபம் பரந்தான் நிற்கும் ??
கழற்றிவிட்டுப் பார்த்தால் காளைக்
கன்றென்ன நடந்தா செல்லும் ??
குழவியிட மினிப்பைக் காட்டிக்
குதித்துநீ பெறுவாய் என்றால்
அழத்தொடங்கி அதுவா செல்லும் ??
அதனைப்போல் நானு மங்கே !
சுற்றிவிட்டாள் சுழன்று போகச்
சொடுக்கிவிட்டாள் அதிர்ந்து போகக்
கற்றவைகள் யாவுங் காட்டி
கலைஞானத் திமிருங் காட்டிக்
கொற்றவனைப் போலே தூவல்
கொண்டேன்நான் கவிதை யாத்தேன் !
அற்புதமாய் அன்னாள் என்னை
அணைத்துடனே முத்தந் தந்தாள் !
நிறுத்தடி என்றேன் ! தேவீ !
நின்றனென் என்று சொல்லி
நிறுத்திய கார ணத்தின்
நிஜந்தனை உரைக்கச் சொன்னாள் !
இறுக்கியே கட்டி என்னை
இப்படிக் கொஞ்சும் முன்பு
வறுத்ததேன் சொல்லாய் என்றேன்
வளநகை சிரிக்க லானாள் !
"விடியலை உவப்ப தெல்லாம்
விலகிடா இருளின் பின்பே
வடிவெழில் சிலைக ளெல்லாம்
வலியுளி நுகர்ந்த பின்பே !
மிடிமையைக் கண்ட பின்தான்
மிளிர்வதுஞ் சுகமாய்த் தோன்றும் !
விடுவிடு கவலை வாவா" !
வென்றவள் அணைத்துக் கொண்டாள் !
-விவேக்பாரதி
28.08.2016