மருத்துவர் என்பர்
மண்ணி லிறையென வந்துவிட் டாரினி
மாயையுள் வீழ்வாரோ ? - மக்கள்
எண்ணற் கரிய மருத்துவ மோர்ந்தனர்
ஏய்த்துப் பிழைப்பாரோ ?
நோயை விலக்கிட எண்ணங்கொண் டார்பல
நோவைத் தருவாரோ ? - வலிப்
பேயைத் துறத்திடும் வன்மைகண் டார்பணப்
பேயை மதிப்பாரோ ?
நாட்டில் நலத்தினை நாட்டவந் தார்கை
நடுக்கமுங் கொள்வாரோ ? - மனக்
கேட்டை யழிப்பவர் கேண்மை வளர்த்தலைக்
கேட்டுத் தெரிவாரோ ?
யாக்கை நிலைதனைத் தேர்த்துவிட் டாரினி
யாரையுங் காவாரோ ? - உடல்
தேக்கிடும் மர்மத் தெளிவுகண் டாருயிர்
தேவைக் கலைவாரோ ?
மானுடங் காத்தலே தெய்வத மென்னும்
மறைமொழி கண்டாரே ! - இனி
தானுடம் பென்றிடுந் தன்னலத் தாலித்
தரணி மறப்பாரோ ?
-விவேக்பாரதி
08.05.2017
மாயையுள் வீழ்வாரோ ? - மக்கள்
எண்ணற் கரிய மருத்துவ மோர்ந்தனர்
ஏய்த்துப் பிழைப்பாரோ ?
நோயை விலக்கிட எண்ணங்கொண் டார்பல
நோவைத் தருவாரோ ? - வலிப்
பேயைத் துறத்திடும் வன்மைகண் டார்பணப்
பேயை மதிப்பாரோ ?
நாட்டில் நலத்தினை நாட்டவந் தார்கை
நடுக்கமுங் கொள்வாரோ ? - மனக்
கேட்டை யழிப்பவர் கேண்மை வளர்த்தலைக்
கேட்டுத் தெரிவாரோ ?
யாக்கை நிலைதனைத் தேர்த்துவிட் டாரினி
யாரையுங் காவாரோ ? - உடல்
தேக்கிடும் மர்மத் தெளிவுகண் டாருயிர்
தேவைக் கலைவாரோ ?
மானுடங் காத்தலே தெய்வத மென்னும்
மறைமொழி கண்டாரே ! - இனி
தானுடம் பென்றிடுந் தன்னலத் தாலித்
தரணி மறப்பாரோ ?
-விவேக்பாரதி
08.05.2017