ஆறு அக்‌ஷரம்

ஆறு அக்‌ஷரம் - முருகன்
    ஆறு அக்‌ஷரம்
ஊற னைத்தும் தீர்க்க வல்ல
    ஆறு அக்‌ஷரம் ! 


நெஞ்சி னுக்குள் வன்மம் மாயை
    நேரில் மாய்க்கு மக்‌ஷரம்
அஞ்சல் கெஞ்சல் நீக்கி உள்ளில்
    ஆண்மை நல்கு மக்‌ஷரம்
மஞ்சு வண்ண நாதன் மருகன்
    மந்தி ரத்தி னக்‌ஷரம்
விஞ்சு கின்ற அருளை அள்ளி
    வீசு கின்ற அக்‌ஷரம் !

சரவணபவ எனுமுரைசொல வருமெழிலது நாளும் !
    சகலமுமுன தடிசரணென விழுவதுமெளி தாகும் !
பரகதிநிலை அதுதருமுய ரழகனினருள் நாமம் !
    பரசிவமக னிருவிழிகளி லழிவுகளழி வெய்தும் !
கரமுடைவிர லதுவுயருற முருகனைநித மெண்ணக்,
    கவலைகளறு மழகுகளுறு மிழிவுகளுட னோடும் !
சரவணபவ சரவணபவ சரவணபவ வேதம்
    சடுதியிலுறும் மனமமைவுற இதுமொழிமட நெஞ்சே !

-விவேக்பாரதி
12.05.2017

Popular Posts