கார்த்திகைச் செல்வன்

வேலுண்டு அச்ச மில்லை - கந்த
வேளுண்டு தோளுண்டு நடுக்க மில்லை
காலுண்டு கவலை யில்லை - வேலக்
காரனின் பேருண்டு பொய்கள் இல்லை !
மயிலுண்டு மயக்க மில்லை - செந்தில்
மன்னனின் கண்ணுண்டிங் கிருளு மில்லை
அயிலுண்டு அழுத்த மில்லை - பழநி
ஆண்டவன் காப்பவன் ! அழுகை யில்லை !
நம்பிக்கை அதிகம் உண்டு - நம்மை
நல்லது சேருமென் றெண்ணம் உண்டு
அம்பிகை மைந்த னுண்டு - நெஞ்சில்
அருளுண்டு பொருளுண்டு அடக்க முண்டு
கார்த்திகைச் செல்வ னுண்டு - எங்கும்
களியுண்டு வழியுண்டு கவிதை யுண்டு
பார்க்கவன் கருணை யுண்டு - அந்தப்
பரமனின் மகனுண்டு பலமும் உண்டு !!
-விவேக்பாரதி
18.02.2017