கொலைகாரி


இன்றென்ன திட்டம்?
எப்படிக் கொல்லப் போகிறாய் ??

கண்ட முதல் நாள்
கண் வாள் அவிழ்த்து
இதயம் கிழித்தாய் !

காதல் சொல்கையில்
சம்மத மொழியால்
ஆணவம் கொன்றாய்!

பழக நெருங்கி வர
நாணச் செயலால்
நறுக்கிப் போட்டாய் !

இடை அசைவு கொண்டு
இமைகளுக்கு உள்ளே
நடம் ஆடி வென்றாய் !

இன்றென்ன திட்டம் ?
உன் அழகால்
என்னை எப்படிக் கொல்லப் போகிறாய் ??
சொல்லடி என் ஆசைக்
"கொலைகாரியே"

-விவேக்பாரதி
26.04.2017Popular Posts