எழில் முனை வேல் !!

Image may contain: drawing

சுதன் அண்ணனின் இப்படத்திற்கு எழுதியது

உருகா மனமும் உருகும் - மெய்
    உணரா அறிவும் உணரும்
மெருகா உயிரும் மெருகும் - உனை
    மெச்சாக் நெஞ்சும் மெச்சும் !
பெருகா விழியும் பெருகும் - நிதம்
    பெருமா பிழைகள் உருகும்
முருகா முருகா முருகா - எழில்
    முனைவேல் குமரா சரணம் !


அயிலில் வினைகள் அழியும் - உன்
    அழகில் அமுதம் வழியும்
மயிலும் துணையாய்த் தொடரும் - எம்
    மதியில் நலமே படரும்
கயிலை பதியின் மகனே - உன்
    கடைகண் எமக்கு வரமே
ஒயிலா அழகா முருகா - உன்
    ஒருபேர் மொழிதல் தவமே!!

-விவேக்பாரதி
17.01.2017

Popular Posts