சித்திரக்கவி - உடுக்கை பந்தம்

No automatic alt text available.

தேவியி னடிநாமே
மேவுப யம்போமே !
மேதினி யுறைவாயே
யேதினி யழலேதே !

பொருள் :

தேவியின் அடியின் கீழே தான் நாம் யாவரும் இருக்கின்றோம். ஆதலால் நம்மை மேவ வரும் பயம் யாவும் போகுமே. இந்த உலகத்தில் வாழும் பக்தனே இன்னும் என்ன அழுகை ? இனிமேல் ஏது அழுகை நாம் நான் தேவியின் அடியின் கீழே இருக்கின்றோமே.

குறிப்பு :

இதன் பொருள் அப்படியே மறுபடியும் முதலிலிருந்து தொடரும்...ஏனெனில் மண்டலித்து வரும் அந்தாதித் தொடையில் இயற்றப்பட்டதாகும். இந்தப் பாவைக் கீழிருந்து மேலாகப் படித்துப் பின்பு குறுக்கில் வந்து மேல் வாக்காய்ச் சென்று பின்பு மறுபடியும் குறுக்கில் வரப் படிக்க வேண்டும்.

-விவேக்பாரதி
26.09.2016

Popular Posts