சிவம் சிவம் !
சிவம் சிவம் என்றே மனம்
தவம் தவம் செய்யும் கணம்
அவம் அவம் நீங்கித் தினம்
அவன் பதம் சேரும் சுகம் !!
மனம் மனம் மாயை தரும்
சினம் சினம் தீயில் விடும்
குணம் குணம் தேடல் தரும்
மணம் சிவன் தாளில் வரும் !!
வனம் எனும் வாழ்வும் தரும்
ரணம் ரணம் நெஞ்சில் எழும்
கணம் கணம் தீரும் வரம்
சிவம் சரண் என்றால் வரும் !!
மறம் தரம் நேசத் திறம்
பரம் பொருள் நாமம் தரும்
அறம் பொருள் இன்பம் வரும்
அருட் தவம் வீடும் தரும் !!
-விவேக்பாரதி
19.05.2017
தவம் தவம் செய்யும் கணம்
அவம் அவம் நீங்கித் தினம்
அவன் பதம் சேரும் சுகம் !!
மனம் மனம் மாயை தரும்
சினம் சினம் தீயில் விடும்
குணம் குணம் தேடல் தரும்
மணம் சிவன் தாளில் வரும் !!
வனம் எனும் வாழ்வும் தரும்
ரணம் ரணம் நெஞ்சில் எழும்
கணம் கணம் தீரும் வரம்
சிவம் சரண் என்றால் வரும் !!
மறம் தரம் நேசத் திறம்
பரம் பொருள் நாமம் தரும்
அறம் பொருள் இன்பம் வரும்
அருட் தவம் வீடும் தரும் !!
-விவேக்பாரதி
19.05.2017