தாகம்

உயிரின் தாகம் வாழ்க்கையிலே !
   உணர்வின் தாகம் வேட்கையிலே !
வயிற்றின் தாகம் உணவினிலே !
   வனப்பின் தாகம் கனவினிலே !

   தாகம் ! ஒரு போகம் !

மனத்தின் தாகம் மோட்சத்தில் !
   மதியின் தாகம் புகழ்ப்பேச்சில் !
வினையின் தாகம் பாராட்டில் !
   விதையின் தாகம் நீரூற்றில் !

    தாகம் ! ஒரு யோகம் !

இரவின் தாகம் ஒளிக்காக !
   இதழின் தாகம் களிக்காக !
வரவின் தாகம் செலவுக்காய் !
   வயதின் தாகம் உறவுக்காய் !

    தாகம் ! ஒரு மோகம் !

உழவின் தாகம் காருக்கு !
   உலகின் தாகம் யாருக்கு ?
எழுத்தின் தாகம் கவிதைக்கு !
   எல்லாம் தாகம் உளத்திற்கு !

    தாகம் ! ஒரு யாகம் !

-விவேக்பாரதி
07.06.2017

Popular Posts