இளைஞர் வாழ்க

இளமை கொண்டவர்கள் வாழ்கவே - வாழ்கவாழ்க
    இளமை கொண்டவர்கள் வாழ்கவே !
வளமை ஆக்கவந்த மக்களாம் - வாழ்கவாழ்க
    வலிப டைத்தவர்கள் வாழ்கவே !


கனவு காணுங்கண்கள் வாழ்கவே - உயருதற்குக்
    கடமை ஆற்றுங்கைகள் வாழ்கவே !
மனதில் அச்சமற்ற வீரர்கள் - பூமியெங்கும்
    மணம்ப ரப்பிநீடு வாழ்கவே !

வேட்கை கொண்டநெஞ்சர் வாழ்கவே - சூழுகின்ற
    வேத னையெரித்து வாழ்கவே !
பாட்டி சைக்ககுமிதழ்கள் வாழ்கவே - கல்விகற்று
    பாரு யர்த்தும்வர்க்கம் வாழ்கவே !

காதல் பேணுமக்கள் யாவரும் - இன்பமுற்று
    கவிதை போலமண்ணில் வாழ்கவே !
நீதி நேர்மைகொண்டு வாழ்ந்திடும் - இளைஞரென்றும்
    நீடு வாழ்கவாழ்க வாழ்கவே !

எச்ச ரிக்கைகொண்ட மானுடர் - நல்லவார்த்தை
    எழுத மண்ணில்நன்கு வாழ்கவே !
மெச்சு தற்குமுரிய சக்தியாம் - இளைஞரென்னும்
    மேன்மை யாளர்வாழ்க வாழ்கவே !

-விவேக்பாரதி
14.07.2017

Comments

Popular Posts