எங்கே போனான் தமிழன் ??
கண்கள் மூடித் தியானித்துப் பார்த்தால்,
கண்ணிலும் நெஞ்சிலும் கண்ணீர் !
எங்கே போகிறோம் ?
தமிழன் எங்கே போனான் ??
தமிழன் எங்கு போனான் ? - அந்தோ
தமிழன் எங்கு போனான் ?
அமிழ்தத் தமிழின் பேச்சு - மானம்
அன்பு தியாகம் வீரம்
திமிரும் ஞானம் கல்வி - என்று
சீர் மிகுந்த தெல்லாம்
தமது பண்பெனத் தான் - கொண்ட
தமிழன் எங்கு போனான் ?
பழைமை ஏசு கின்றான் - புதிதாய்ப்
பரவு கின்ற மோக
விழைவில் பேசு கின்றான் - அந்தோ
வீழ்ந்து போகி றானே ?
எழுந்து வாழக் கூட - இங்கே
ஏனோ அஞ்சு கின்றான் !
விழுந்து வாழு கின்றான் ! - அந்தோ
வீரத் தமிழன் எங்கே ??
மேலை வழக்கம் மீது - மோகம்
மேலெ ழுந்த தாலே
காலை மறந்து போனான் - செய்யும்
கடமை மறந்து போனான்
தோலை ஆடை மூடத் - தோலின்
தன்மை மாறிப் போமோ ?
பாலை ஊட்டி விட்டாள் - அன்னை
பாசம் மறந்து போமோ ?
மரபைத் தள்ளு கின்றான் - அதனால்
மண்ணில் வீழு கின்றான்
வரவை எண்ணி எண்ணிக் - கையின்
வளங்கள் போக்கு கின்றான் !
சரியைத் தவற்றை அறியா - திந்தச்
சகத்தில் கற்க ளைப்போல்
இருந்து மாளு கின்றான் - அந்தோ
இதுவோ தமிழர் வாழ்வு ?
"முன்ன வர்கள் யாரோ?" - கேள்வி
முன்னெ ழுப்பு கின்றான் !
தன்னைப் பற்றி அறியா - திங்கே
தமிழன் வாழு கின்றான் !
சொன்ன படிக்கு மாடும் - ஆட்டச்
ஜோடி பொம்மை போலே
இன்று லாவு கின்றான் - அந்தோ
இதுவோ தமிழர் மாண்பு !
விண்ண ளாவு கின்ற - அவனின்
வீரத் தேகம் எங்கே ?
மண்ண ளாவி நின்ற - அவனின்
மனித நேயம் எங்கே ?
எண்ணும் புத்தி எங்கே ? - எதையும்
ஏற்று வாழு வானேன் ?
புண்ணு ழன்று வாழும் - அற்பப்
புழுவா தமிழர்க் கூட்டம் ?
கூட்டம் கூடு தென்றால் - உடனே
கோஷம் போடு கின்றான்
கூட்டம் கலைந்து விட்டால் - தான்தன்
குற்றம் களைந்தி டாது
மீட்டும் அதனைச் செய்தே - எல்லை
மீறி ஆசை கொள்வான் !
வீட்டி லிருந்து கொண்டே - பெரிதாய்
வீரம் பேசு கின்றான் !
வெளியெ ழுந்து வாராய் - தமிழா
வேக மாக வாராய் !
துளியு மச்ச மின்றி - நெஞ்சில்
தோன்றும் உறுதி யோடும்
தெளிவு பெற்ற சிந்தை - கொண்டே
தெருவி லிறங்கி வாராய் !
களிமி குக்க சேர்ந்தால் - முட்டும்
கயமை ஓடி டாதோ ?
தமிழன் வந்து விட்டான் - என்றே
தரணி மெச்சி டாதோ ?
அமிழ்த்தப் பார்க்கும் கூட்டம் - இங்கே
அடங்கிப் போகி டாதோ ?
நமது நஞ்சை எல்லாம் - வாழ
நாளும் மாரி பெய்ய
அமைத்து வைத்த முன்னோர் - வழிகள்
அதனைக் கொண்டு வாராய் !
நீயெ ழுந்து வந்தால் - சூழும்
நீசர்க் கூட்டம் வீழும் !
நீயெ ழுந்து வந்தால் - வளமை
நீளும் ! பசுமை ஆளூம் !
நீயெ ழுந்து வாராய் - தமிழா
நித்த நித்தம் புதிதாய் !
நீயெ ழுந்து வாராய் - எங்கும்
நீயே வாழு கின்றாய் !
-விவேக்பாரதி
12.01.2017
கண்ணிலும் நெஞ்சிலும் கண்ணீர் !
எங்கே போகிறோம் ?
தமிழன் எங்கே போனான் ??
தமிழன் எங்கு போனான் ? - அந்தோ
தமிழன் எங்கு போனான் ?
அமிழ்தத் தமிழின் பேச்சு - மானம்
அன்பு தியாகம் வீரம்
திமிரும் ஞானம் கல்வி - என்று
சீர் மிகுந்த தெல்லாம்
தமது பண்பெனத் தான் - கொண்ட
தமிழன் எங்கு போனான் ?
பழைமை ஏசு கின்றான் - புதிதாய்ப்
பரவு கின்ற மோக
விழைவில் பேசு கின்றான் - அந்தோ
வீழ்ந்து போகி றானே ?
எழுந்து வாழக் கூட - இங்கே
ஏனோ அஞ்சு கின்றான் !
விழுந்து வாழு கின்றான் ! - அந்தோ
வீரத் தமிழன் எங்கே ??
மேலை வழக்கம் மீது - மோகம்
மேலெ ழுந்த தாலே
காலை மறந்து போனான் - செய்யும்
கடமை மறந்து போனான்
தோலை ஆடை மூடத் - தோலின்
தன்மை மாறிப் போமோ ?
பாலை ஊட்டி விட்டாள் - அன்னை
பாசம் மறந்து போமோ ?
மரபைத் தள்ளு கின்றான் - அதனால்
மண்ணில் வீழு கின்றான்
வரவை எண்ணி எண்ணிக் - கையின்
வளங்கள் போக்கு கின்றான் !
சரியைத் தவற்றை அறியா - திந்தச்
சகத்தில் கற்க ளைப்போல்
இருந்து மாளு கின்றான் - அந்தோ
இதுவோ தமிழர் வாழ்வு ?
"முன்ன வர்கள் யாரோ?" - கேள்வி
முன்னெ ழுப்பு கின்றான் !
தன்னைப் பற்றி அறியா - திங்கே
தமிழன் வாழு கின்றான் !
சொன்ன படிக்கு மாடும் - ஆட்டச்
ஜோடி பொம்மை போலே
இன்று லாவு கின்றான் - அந்தோ
இதுவோ தமிழர் மாண்பு !
விண்ண ளாவு கின்ற - அவனின்
வீரத் தேகம் எங்கே ?
மண்ண ளாவி நின்ற - அவனின்
மனித நேயம் எங்கே ?
எண்ணும் புத்தி எங்கே ? - எதையும்
ஏற்று வாழு வானேன் ?
புண்ணு ழன்று வாழும் - அற்பப்
புழுவா தமிழர்க் கூட்டம் ?
கூட்டம் கூடு தென்றால் - உடனே
கோஷம் போடு கின்றான்
கூட்டம் கலைந்து விட்டால் - தான்தன்
குற்றம் களைந்தி டாது
மீட்டும் அதனைச் செய்தே - எல்லை
மீறி ஆசை கொள்வான் !
வீட்டி லிருந்து கொண்டே - பெரிதாய்
வீரம் பேசு கின்றான் !
வெளியெ ழுந்து வாராய் - தமிழா
வேக மாக வாராய் !
துளியு மச்ச மின்றி - நெஞ்சில்
தோன்றும் உறுதி யோடும்
தெளிவு பெற்ற சிந்தை - கொண்டே
தெருவி லிறங்கி வாராய் !
களிமி குக்க சேர்ந்தால் - முட்டும்
கயமை ஓடி டாதோ ?
தமிழன் வந்து விட்டான் - என்றே
தரணி மெச்சி டாதோ ?
அமிழ்த்தப் பார்க்கும் கூட்டம் - இங்கே
அடங்கிப் போகி டாதோ ?
நமது நஞ்சை எல்லாம் - வாழ
நாளும் மாரி பெய்ய
அமைத்து வைத்த முன்னோர் - வழிகள்
அதனைக் கொண்டு வாராய் !
நீயெ ழுந்து வந்தால் - சூழும்
நீசர்க் கூட்டம் வீழும் !
நீயெ ழுந்து வந்தால் - வளமை
நீளும் ! பசுமை ஆளூம் !
நீயெ ழுந்து வாராய் - தமிழா
நித்த நித்தம் புதிதாய் !
நீயெ ழுந்து வாராய் - எங்கும்
நீயே வாழு கின்றாய் !
-விவேக்பாரதி
12.01.2017