காதல் மோதல்

காதலன் :

காதலீ ! என் காதலீ !
என்னைக் களவாடிச் செல்கின்ற மோகினீ !
பாரடீ ! எனைப் பாரடீ !
என் ஹார்மோனுக்குள் போரடி !

தூரத்திலே ! வெகு தூரத்திலே - அந்த
நேரத்திலே ! அந்தி நேரத்திலே ! - கண்டு
என் நெஞ்சு கூத்தாட
உன் கண்ணைப் பார்த்தாட
காதல் மயக்கத்தில்
காலங்கள் பூத்தாட
என்னென்ன மாயங்கள் செய்துவிட்டாய் ! - அடி
ஏழெட்டு அம்புகள் எய்துவிட்டாய் !

காதலி :

காதலா ! என் காதலா !
கண்ணிமை தன்னில் கதைசொல்லும் வீரா !
நீயடா ! இனி நீயடா !
நிழலும் நின்னுரு ஆச்சுது போடா !

காதலிலே ! உயிர்க் காதலிலே ! - கண்ட
மோதலிலே நெஞ்ச மோதலிலே - மனம்
வானில் பறக்குது
ஏனோ நடிக்குது
உன்னை நினைக்கையில்
உணர்வுகள் பூக்குது !
நாணங்கள் அச்சங்கள் சென்றதடா ! - இது
நானல்ல, காதல் "நீ" என்றதடா !

-விவேக்பாரதி !
20.04.2017

Popular Posts