அழுது வருந்தாதீர் !!
தூக்கமி லாதெழும் விழிகளி ரண்டினில்
தோன்றும் கனவுகளே - எனைத்
தூண்டும் நினைவுகளே - உம்மை
ஆக்குவ தார்வழி போக்குவ தாரவர்
ஆரெனச் சொல்லுங்களே ! - அடை
யாளங் காட்டுங்களே !
இருட்டறை தன்னுளே இமைகளுக் குள்சுடர்
இருத்திடும் தீபங்களே - நான்
இயற்றிய பாவங்களே - எனை
வெருட்டுவ தேன்?மிக நெருக்குவ தேனென
விரைவுடன் சொல்லுங்களே - சொல்லி
வெளியினில் செல்லுங்களே !
உடலினை விட்டுயர் வானைய டந்திட
உந்திடும் நெஞ்சகமே - அட
ஊமை யஞ்சுகமே ! - உன்
படபட புக்கென காரண மோவதைப்
பகர்ந்திடு என்னிடமே - கதை
பகிர்ந்திடு சிந்தையிலே !
எண்ணமெ னுங்கொடி தன்னைய சைத்துயர்
ஏகிடும் பூங்காற்றே ! - துயர்
ஏற்றிடும் தண்ணூற்றே ! - இந்த
வண்ணந டங்களை என்றுமு டித்துயிர்
வாழ்ந்திடச் செய்யுவிரோ ? - விடை
வழங்குக இங்ஙணமே !
சோர்வினைத் தந்துடன் தூக்கம்ப றித்தெனை
சோதனை செய்யுகிறீர் ! - உயிர்
சோதியைக் கவ்வுகிறீர் - உமை
ஆர்த்தெழுந் தாலுமை மாய்த்திடு வாளெனை
அண்டிநெ ருங்காதீர் ! - பின்
அழுதுவ ருந்தாதீர் !!
-விவேக்பாரதி
18.04.2017
தோன்றும் கனவுகளே - எனைத்
தூண்டும் நினைவுகளே - உம்மை
ஆக்குவ தார்வழி போக்குவ தாரவர்
ஆரெனச் சொல்லுங்களே ! - அடை
யாளங் காட்டுங்களே !
இருட்டறை தன்னுளே இமைகளுக் குள்சுடர்
இருத்திடும் தீபங்களே - நான்
இயற்றிய பாவங்களே - எனை
வெருட்டுவ தேன்?மிக நெருக்குவ தேனென
விரைவுடன் சொல்லுங்களே - சொல்லி
வெளியினில் செல்லுங்களே !
உடலினை விட்டுயர் வானைய டந்திட
உந்திடும் நெஞ்சகமே - அட
ஊமை யஞ்சுகமே ! - உன்
படபட புக்கென காரண மோவதைப்
பகர்ந்திடு என்னிடமே - கதை
பகிர்ந்திடு சிந்தையிலே !
எண்ணமெ னுங்கொடி தன்னைய சைத்துயர்
ஏகிடும் பூங்காற்றே ! - துயர்
ஏற்றிடும் தண்ணூற்றே ! - இந்த
வண்ணந டங்களை என்றுமு டித்துயிர்
வாழ்ந்திடச் செய்யுவிரோ ? - விடை
வழங்குக இங்ஙணமே !
சோர்வினைத் தந்துடன் தூக்கம்ப றித்தெனை
சோதனை செய்யுகிறீர் ! - உயிர்
சோதியைக் கவ்வுகிறீர் - உமை
ஆர்த்தெழுந் தாலுமை மாய்த்திடு வாளெனை
அண்டிநெ ருங்காதீர் ! - பின்
அழுதுவ ருந்தாதீர் !!
-விவேக்பாரதி
18.04.2017