கதிருக்கு அறிவுரை
சுற்றிநின் றெங்கும் சுடர்பரப்பிக் கொண்டிருக்கும்
வெற்றி தரும்கதிரே ! வேந்தனே - பற்றி
எரியுதல் விடுத்தே எனக்காகக் கொஞ்சம்
பரிவோடு மக்களைநீ பார் !
வெற்றி தரும்கதிரே ! வேந்தனே - பற்றி
எரியுதல் விடுத்தே எனக்காகக் கொஞ்சம்
பரிவோடு மக்களைநீ பார் !
பாரை எரிக்காமல் பார்ப்பாய் எனச்சொன்னால்
ஊரை அழைத்துன்றன் உன்னதத்தைச் - சீருடைய
பாவால் புகழ்ந்து பறையடிப்பேன் ! இல்லையெனில்
நோவால் உனையிகழ்வேன் நொந்து !
நொந்து கவிஞன் நுவன்றுவிட்டால், பின்புன்றன்
சந்ததியே மாளாத் துயர்கொள்ளும் ! - இந்தநிலை
நீயடையக் கூடிடுமோ ? நீள்வான் அரசாளும்
வாயுவுட லோனே ! வழங்கு !
வழங்கும் ஒளியோடு வாரி வெயிலைப்
பொழிதல் தவிர்ப்பாய் புவியில் ! - இழிவுனக்
கேன்கதிர்த் தேவா ? எரிக்காமல் தண்ணொளியால்
மான்போலத் துள்ளி மகிழ் !
மகிழ விரும்புகின்ற மாந்தர்க ளெல்லாம்
முகிழும் மரம்வைக்க முந்தார் ! - பகலவனே
இந்தச் சிறுவர்மேல் இங்கே சினமென்ன ?
பொந்தைப் புலிமேய்தல் போல் !
-விவேக்பாரதி
20.03.2017
ஊரை அழைத்துன்றன் உன்னதத்தைச் - சீருடைய
பாவால் புகழ்ந்து பறையடிப்பேன் ! இல்லையெனில்
நோவால் உனையிகழ்வேன் நொந்து !
நொந்து கவிஞன் நுவன்றுவிட்டால், பின்புன்றன்
சந்ததியே மாளாத் துயர்கொள்ளும் ! - இந்தநிலை
நீயடையக் கூடிடுமோ ? நீள்வான் அரசாளும்
வாயுவுட லோனே ! வழங்கு !
வழங்கும் ஒளியோடு வாரி வெயிலைப்
பொழிதல் தவிர்ப்பாய் புவியில் ! - இழிவுனக்
கேன்கதிர்த் தேவா ? எரிக்காமல் தண்ணொளியால்
மான்போலத் துள்ளி மகிழ் !
மகிழ விரும்புகின்ற மாந்தர்க ளெல்லாம்
முகிழும் மரம்வைக்க முந்தார் ! - பகலவனே
இந்தச் சிறுவர்மேல் இங்கே சினமென்ன ?
பொந்தைப் புலிமேய்தல் போல் !
-விவேக்பாரதி
20.03.2017