இனியன

இனியன !
இந்த மாலைப்
பொழுதுகள் இனியன !
அவை மாற
வானம் காட்டும்
ஜாலங்கள் இனியன !
பார்க்கும் பொழுதெல்லாம்
மின்னுகின்ற
நட்சத்திரங்கள் இனியன !
கண்ணாமூச்சி காட்டி
விளையாடும்
முகில்கள் இனியன !
இரவுகள் இனியன !
அவை எழுப்பும்
கனவுகளும்
அதில் கசியும்
கவிதைகளும்
என்றும் உயிர்க்கு இனியன !
சாயங்கால
மழைத்துளிகள் இனியன !
காளான்கள் இனியன !
வௌவால், ஆந்தை,
சுவர்க்கோழி, விட்டில்,
கொசுக்கள்
யாவும் இனியன !
இவற்றை நேசிக்கும்
மனங்கள்
இனியவற்றுள்ளும்
இனியன !

-விவேக்பாரதி
22.06.2017

Popular Posts