அறிவென்று
ஒருகுடத்தே விளக்கொன்றை ஏற்றி வைத்தால்
ஒருபயனும் வாராதே ! அவ்வி ளக்கைப்
பெரிதான குன்றத்தில் ஏற்றி வைத்தால்
பேயிருட்டை அதுநீக்கும் ! உலக மீதில்
ஒருசாரார்க் குதவுகின்ற வழியில் மட்டும்
ஓங்கிடுதல் அறிவன்று ! மக்க ளுக்குச்
சரியான முறையினிலே சேரு மொன்றே !
சகமக்கள் அறிவென்று மெச்சு வாரே !
-விவேக்பாரதி
05.04.2017
ஒருபயனும் வாராதே ! அவ்வி ளக்கைப்
பெரிதான குன்றத்தில் ஏற்றி வைத்தால்
பேயிருட்டை அதுநீக்கும் ! உலக மீதில்
ஒருசாரார்க் குதவுகின்ற வழியில் மட்டும்
ஓங்கிடுதல் அறிவன்று ! மக்க ளுக்குச்
சரியான முறையினிலே சேரு மொன்றே !
சகமக்கள் அறிவென்று மெச்சு வாரே !
-விவேக்பாரதி
05.04.2017
Comments
Post a Comment