பாட்டுக்குள்ள


பாட்டுக்குள்ள என்னடா பேதம் - அந்தப்
பாட்டுதான் மனுஷன் வேதம்

நாட்டுக்குள்ள எத்தனையோ
பாட்டிருக்கு தம்பீ
நல்ல பாட்ட நீபாடு !
நாலுபேருக் கில்லாம
நாலாயிரம் பேரு
நல்லாக் கேட்கத் தமிழ்பாடு ! (பாட்டுக்குள்ள)

சோகப் பாட்டா
இருந்தாலும் கூட
சொந்தப் பாட்ட நீபாடு !
ராகம் தாளம்
நமக்கேது ? போடா
ராவும் பகலும் தமிழ்ப்பாடு ! (பாட்டுக்குள்ள)

காதலத்தான் பாட்டுக்குள்ள
கட்டிவெச்சுப் பாரு
கவித ஊத்தும் தேனாக !
கால நேரம் பாக்காம
பாட்டெடுத்து பாடு !
கவிஞன் ஆகுவ தானாக ! (பாட்டுக்குள்ள)

பாடல் :https://soundcloud.com/vivekbharathi/maanikakoodai

-விவேக்பாரதி
30.03.2017

Popular Posts