உரை பொழிய
முதன்முறையாய்ச் சபையேறிப் பேசி டத்தான்
முனைப்போடு நான்வந்தேன் ! ஆதி சக்தி !
விதவிதமா யெழும்பிழைகள், சொல்லில் குற்றம்
விளக்குகின்ற நேரத்தில் உளறல், மற்றும்
பதம்பிரிக்கா தப்படியே பேசும் வேகம்,
பராசக்தி நீநீக்கித் தெளிவு தன்னை
மதலையென்றன் நாவினுக்குள் அருளாய்த் தாராய் !
மாகாளி ! இதுகடமை அறிந்தி டாயோ ??
நான்சொல்ல நினைப்பதெலாம் கேட்போ ருக்கு
நனிநன்றாய்ச் செவிசேரும் வகைமை செய்வாய் !
வான்போன்ற மேடையில்நான் நின்றால் கூட
வாக்கினிலே ஆங்காரம் முளைத்தி டாத
தேன்போன்ற இன்பேச்சு, ஆற்றல், வீச்சு,
தேவையெனக் கேட்கின்றேன் தந்தி ருப்பாய் !
மான்விழியே ! மனவலியே ! வீரீ ! காளீ !
மழலைக்குக் காப்பாக இருந்தி டம்மா !
காளமேகன் நாவுக்குள் தாம்பூ லத்தைக்
கவிசொல்ல வுமிழ்ந்தனையே ! உன்றன் பக்தன்
காளிதாசன் மென்னாவில் சுலத் தாலே
கவினுறவே எழுதினையே ! பாவ லர்க்கு
வாளியெனத் தமிழ்சொற்கள் பாயு தற்கு
வலிமைகொ டுப்பவளே ! இங்கே குப்பைக்
கூளமென மனங்கொண்ட உன்றன் பிள்ளை
குணமாகப் பேசவழி செய்யு வாயே !
- விவேக்பாரதி
09.01.2017
முனைப்போடு நான்வந்தேன் ! ஆதி சக்தி !
விதவிதமா யெழும்பிழைகள், சொல்லில் குற்றம்
விளக்குகின்ற நேரத்தில் உளறல், மற்றும்
பதம்பிரிக்கா தப்படியே பேசும் வேகம்,
பராசக்தி நீநீக்கித் தெளிவு தன்னை
மதலையென்றன் நாவினுக்குள் அருளாய்த் தாராய் !
மாகாளி ! இதுகடமை அறிந்தி டாயோ ??
நான்சொல்ல நினைப்பதெலாம் கேட்போ ருக்கு
நனிநன்றாய்ச் செவிசேரும் வகைமை செய்வாய் !
வான்போன்ற மேடையில்நான் நின்றால் கூட
வாக்கினிலே ஆங்காரம் முளைத்தி டாத
தேன்போன்ற இன்பேச்சு, ஆற்றல், வீச்சு,
தேவையெனக் கேட்கின்றேன் தந்தி ருப்பாய் !
மான்விழியே ! மனவலியே ! வீரீ ! காளீ !
மழலைக்குக் காப்பாக இருந்தி டம்மா !
காளமேகன் நாவுக்குள் தாம்பூ லத்தைக்
கவிசொல்ல வுமிழ்ந்தனையே ! உன்றன் பக்தன்
காளிதாசன் மென்னாவில் சுலத் தாலே
கவினுறவே எழுதினையே ! பாவ லர்க்கு
வாளியெனத் தமிழ்சொற்கள் பாயு தற்கு
வலிமைகொ டுப்பவளே ! இங்கே குப்பைக்
கூளமென மனங்கொண்ட உன்றன் பிள்ளை
குணமாகப் பேசவழி செய்யு வாயே !
- விவேக்பாரதி
09.01.2017