சூரியப் படையல்
படையல் வைத்தோம் - எமை
பார்த்தருள் செய்யுக சூரியனே !
ஒளியுருவாய் வானத்தின் உச்சி தோன்றி
ஒய்யார மாய்வானில் விரிந்து கொண்டு
தெளிவுறவே எஞ்ஞான்றும் கதிர்ப ரப்பித்
தெவிட்டாமல் கண்ணுக்குக் காட்சி காட்டி
வளியாலே அணையாத விளக்கா யென்றும்
வளம்கூட்டி நலம்கூட்டி வாழ்வ ளித்துக்
களிவளர கீழ்த்திசையில் நிற்கும் தேவே
கதிரவனே நீவாழ்க வாழ்க வாழ்க !
பயிருக்குன் ஒளிவேண்டும் மண்ணெ டுத்துப்
பானையெனச் செய்பவர்க்குன் சூடு வேண்டும்
உயிருக்குன் கதிர்வேண்டும் துணிவெ ளுத்தே
உலர்த்துகின்ற தோழருக்குன் உதவி வேண்டும்
இயற்கையிலே மழைச்செல்வம் கொடுக்கும் தேவே !
இருள்தன்னை மாய்க்கின்ற சோதி யாவாய் !
அயராமல் என்றென்றும் உழைக்கும் வர்க்க
ஆதவனே நீவாழ்க வாழ்க வாழ்க !
உனக்கிங்கே பொங்கலிட்டோம் உன்றன் மக்கள்
உயிர்வாழ என்றென்றும் விழிதி றப்பாய்
மனத்தோடு வஞ்சமிலா உண்மைத் தீயே
மாபெரிய அறிவியலில் விளங்காக் கூறே
சினமேதும் கொள்ளாமல் சீறி டாமல்
சித்திரையில் காயாமல் கொஞ்சம் வீசி
மனிதர்தமை வாட்டாமல் இருக்கக் கற்பாய்
மன்னவனே நீவாழ்க வாழ்க வாழ்க !
-விவேக்பாரதி
16.01.2017
பார்த்தருள் செய்யுக சூரியனே !
ஒளியுருவாய் வானத்தின் உச்சி தோன்றி
ஒய்யார மாய்வானில் விரிந்து கொண்டு
தெளிவுறவே எஞ்ஞான்றும் கதிர்ப ரப்பித்
தெவிட்டாமல் கண்ணுக்குக் காட்சி காட்டி
வளியாலே அணையாத விளக்கா யென்றும்
வளம்கூட்டி நலம்கூட்டி வாழ்வ ளித்துக்
களிவளர கீழ்த்திசையில் நிற்கும் தேவே
கதிரவனே நீவாழ்க வாழ்க வாழ்க !
பயிருக்குன் ஒளிவேண்டும் மண்ணெ டுத்துப்
பானையெனச் செய்பவர்க்குன் சூடு வேண்டும்
உயிருக்குன் கதிர்வேண்டும் துணிவெ ளுத்தே
உலர்த்துகின்ற தோழருக்குன் உதவி வேண்டும்
இயற்கையிலே மழைச்செல்வம் கொடுக்கும் தேவே !
இருள்தன்னை மாய்க்கின்ற சோதி யாவாய் !
அயராமல் என்றென்றும் உழைக்கும் வர்க்க
ஆதவனே நீவாழ்க வாழ்க வாழ்க !
உனக்கிங்கே பொங்கலிட்டோம் உன்றன் மக்கள்
உயிர்வாழ என்றென்றும் விழிதி றப்பாய்
மனத்தோடு வஞ்சமிலா உண்மைத் தீயே
மாபெரிய அறிவியலில் விளங்காக் கூறே
சினமேதும் கொள்ளாமல் சீறி டாமல்
சித்திரையில் காயாமல் கொஞ்சம் வீசி
மனிதர்தமை வாட்டாமல் இருக்கக் கற்பாய்
மன்னவனே நீவாழ்க வாழ்க வாழ்க !
-விவேக்பாரதி
16.01.2017