தந்தை

மீசை வைத்ததும்
உன்னைப் பார்த்தே
ஆசை வைத்ததும்
உன்னைப் பார்த்தே
அப்பா !
மூன்றெழுத்து அதிசயமே !
தனியாகவும் சரி
அம்மாவுடனும் சரி
தோற்றுத்தான் போய்க்கொண்டிருக்கிறேன்
உன்னை அறியும் முயற்சியில்
இன்றுவரை ! 
உன்னைத் தடியாக நான் தேடும்
பொழுதிலெல்லாம் எனக்கு
வழியானாய் !
வழிமீது நானே நடக்கப்
பழக்கம் கொடுத்தாயே
உனக்கு முழக்கம் கொடுப்பதைத் தவிர
வேறொன்றும் இல்லா ஏழை
முழங்குகிறேன் !

"வாழ்க என் தந்தை
வாழி நின் சிந்தை "

-விவேக்பாரதி
18.06.2017

Comments

Popular Posts