காலம் சாகுமா ?

மாண்டு போகுமா - நேரம்
மாண்டு போகுமா ?

ஆண்டு வாரம் கிழமை தேதி
   அழிந்து போகுமா ? - இல்லை
மீண்டு மீண்டு வந்து நம்மை
   மிரள வைக்குமா ?

இறந்தகாலம் என்பதென்ன
   இழந்த காலமா ? - தலை
சிறந்த காலம் இழந்து விட்ட
   சிரம மாகுமா ?

நேரம் காலம் நடந்து போகும்
   நேர்த்தி யானது - கொஞ்சம்
தூரம் போக ஓட்டம் கொள்ளும்
   தோற்றம் கொண்டது !

அற்பப் போதில் காலம் கூட
   அழிவு கண்டிடும் - அதில்
சொற்ப தங்கள் கவிதை யாகி
   சொர்க்கம் வென்றிடும் !!

-விவேக்பாரதி
19.06.2017

Popular Posts