வாடா மலர்
சந்தவசந்தக் கவிதை அரங்கதில் பாடப்பெற்றது !
பாடாக் கவிதை ஒன்றிங்கே
பல்லக் கேறி பவனிவரும்
நாடாப் பரிசை எந்நாளும்
நாடும் நெஞ்சம் நடனமுறும்
கூடா உணர்வும் அறிவோடு
கூட முயன்று தத்தளிக்கும் !
வாடா மலராம் ஒன்றுமட்டும்
வாழ்க்கை தந்து வாழ்த்திடுமே !
வாழ்வைத் தந்த அம்மலர்தான்
வாய்மை என்னும் செம்மலர்தான்
ஆழ்ந்த ஞான மரத்தினிலே
அதுவாய்ப் பூத்த நறுமலர்தான் !
சூழ்ந்த பொய்யின் துர்நாற்றம்
சுருண்டு மாளக் காளித்தாய்
வாழ்த்தித் தந்த மலராகும் !
வாய்மை வாடா மலராகும் !
குற்றம் நிகழும் வேளைகளில்
குறைகள் முதலில் வென்றாலும்
சுற்றம், தூய்மை, மனசாட்சி,
சூழல் இவற்றால் இறுதியிலே
வெற்றி தன்னைப் பிடிக்கின்ற
வெள்ளை மலர்தான் உண்மைப்பூ !
கற்றோர் என்றும் சூடும்பூ
கடமைக் கனியை நல்கும்பூ !
முல்லை கொன்றை பனியல்லி
மொட்டுக் கமலம் இவையாவும்
பல்லைக் காட்டி முகிழ்ந்தாலும்
பாழ்பட் டொருநாள் வாடிவிடும் !
சொல்லும் கவியும் பிழைசேரின்
சொக்கி மயங்கி வாடிவிடும்
அல்லும் பகலும் அகத்தினிலே
அரும்பும் வாடா உண்மைப்பூ !
வாய்மைப் பூவை நம்மெண்ண
வனத்தில் நன்றாய்ப் பயிரிட்டால்
ஏய்க்கும் மாயை தீண்டாதே !
என்றும் பொய்யே அண்டாதே !
காய்த்துப் பூத்துப் பசுமைதான்
காட்சி கொடுக்கும் எழில்காண்போம் !
ஆய்ந்தால் பலன்கள் ஏராளம்
அறிவு திறப்போம் ! உயர்வோமே !
-விவேக்பாரதி
18.04.2017
பாடாக் கவிதை ஒன்றிங்கே
பல்லக் கேறி பவனிவரும்
நாடாப் பரிசை எந்நாளும்
நாடும் நெஞ்சம் நடனமுறும்
கூடா உணர்வும் அறிவோடு
கூட முயன்று தத்தளிக்கும் !
வாடா மலராம் ஒன்றுமட்டும்
வாழ்க்கை தந்து வாழ்த்திடுமே !
வாழ்வைத் தந்த அம்மலர்தான்
வாய்மை என்னும் செம்மலர்தான்
ஆழ்ந்த ஞான மரத்தினிலே
அதுவாய்ப் பூத்த நறுமலர்தான் !
சூழ்ந்த பொய்யின் துர்நாற்றம்
சுருண்டு மாளக் காளித்தாய்
வாழ்த்தித் தந்த மலராகும் !
வாய்மை வாடா மலராகும் !
குற்றம் நிகழும் வேளைகளில்
குறைகள் முதலில் வென்றாலும்
சுற்றம், தூய்மை, மனசாட்சி,
சூழல் இவற்றால் இறுதியிலே
வெற்றி தன்னைப் பிடிக்கின்ற
வெள்ளை மலர்தான் உண்மைப்பூ !
கற்றோர் என்றும் சூடும்பூ
கடமைக் கனியை நல்கும்பூ !
முல்லை கொன்றை பனியல்லி
மொட்டுக் கமலம் இவையாவும்
பல்லைக் காட்டி முகிழ்ந்தாலும்
பாழ்பட் டொருநாள் வாடிவிடும் !
சொல்லும் கவியும் பிழைசேரின்
சொக்கி மயங்கி வாடிவிடும்
அல்லும் பகலும் அகத்தினிலே
அரும்பும் வாடா உண்மைப்பூ !
வாய்மைப் பூவை நம்மெண்ண
வனத்தில் நன்றாய்ப் பயிரிட்டால்
ஏய்க்கும் மாயை தீண்டாதே !
என்றும் பொய்யே அண்டாதே !
காய்த்துப் பூத்துப் பசுமைதான்
காட்சி கொடுக்கும் எழில்காண்போம் !
ஆய்ந்தால் பலன்கள் ஏராளம்
அறிவு திறப்போம் ! உயர்வோமே !
-விவேக்பாரதி
18.04.2017