இத்தனை தாமதமோ ??
இத்தனை தாமதமோ - முன்புவர
இத்தனை தாமதமோ ?
ஈசன் மகனே கண்முன்பு தோன்றிட
இத்தனை தாமதமோ ?
முத்து மணிமார்பில் - பூவாய்
முகிழ ஆசைகொண்டேன்
வித்தகப் பாதத்திலே - துகளாய்
வீற்றிருக்க வைப்பாய் ! ஐயப்பா
சங்கடம் தீர்ப்பவனே - அழகு
சபரி மலைவாசா !
எங்களின் சற்குருவே ! - சரணம்
ஏற்றி மொழிந்திடுவோம் ! ஐயப்பா
வன்புலி வாகனனே - அடர்ந்த
வனத்தில் வாழ்பவனே
மன்னவன் புத்திரனே - பொருதி
மகிசியைக் கொன்றவனே ! ஐயப்பா
சிரித்த பூமுகத்தில் - தோன்றும்
செருக்க ழிந்திடுமே
பருத்த கன்னத்திலே - எங்கள்
பாவம் தொலைந்திடுமே ! ஐயப்பா
மாலை அணிந்துவந்தோம் - மலைமேல்
மாண்புடன் ஏறிவந்தோம் !
காலைக் கதிரவனாய் - ஒளியை
கண்ணுக் களிப்பவனே ! ஐயப்பா
ஆசி கொடுத்திடப்பா - அருளை
அள்ளிக் கொடுத்திடப்பா !
பேச வருகுதில்லை - உன்றன்
பேருரு கண்டபின்னே ! ஐயப்பா
படம் : சுதன் காளிதாஸ்
-விவேக்பாரதி
18.05.2017
இத்தனை தாமதமோ ?
ஈசன் மகனே கண்முன்பு தோன்றிட
இத்தனை தாமதமோ ?
முத்து மணிமார்பில் - பூவாய்
முகிழ ஆசைகொண்டேன்
வித்தகப் பாதத்திலே - துகளாய்
வீற்றிருக்க வைப்பாய் ! ஐயப்பா
சங்கடம் தீர்ப்பவனே - அழகு
சபரி மலைவாசா !
எங்களின் சற்குருவே ! - சரணம்
ஏற்றி மொழிந்திடுவோம் ! ஐயப்பா
வன்புலி வாகனனே - அடர்ந்த
வனத்தில் வாழ்பவனே
மன்னவன் புத்திரனே - பொருதி
மகிசியைக் கொன்றவனே ! ஐயப்பா
சிரித்த பூமுகத்தில் - தோன்றும்
செருக்க ழிந்திடுமே
பருத்த கன்னத்திலே - எங்கள்
பாவம் தொலைந்திடுமே ! ஐயப்பா
மாலை அணிந்துவந்தோம் - மலைமேல்
மாண்புடன் ஏறிவந்தோம் !
காலைக் கதிரவனாய் - ஒளியை
கண்ணுக் களிப்பவனே ! ஐயப்பா
ஆசி கொடுத்திடப்பா - அருளை
அள்ளிக் கொடுத்திடப்பா !
பேச வருகுதில்லை - உன்றன்
பேருரு கண்டபின்னே ! ஐயப்பா
படம் : சுதன் காளிதாஸ்
-விவேக்பாரதி
18.05.2017
Comments
Post a Comment