புதுப் பாடல்

சோர்வில் வீழும் சோடிக் கண்கள் !
வேர்வை மழையில் விழுந்த தேகம் !

அலைச்சல் கண்டே அவிந்த கால்கள் !
வலைச்சிக் கல்போல் வலிக்கும் நெற்றி !

வலியின் பளுவை வாங்கிய தோள்கள் !
கலியின் வெயிலின் கனன்ற மூளை !

ஓய்வைத் தேடி ஒதுங்கும் முதுகு !
சாய்ந்தே துணையைச் சாரும் கழுத்து !

அடுப்பைப் போன்றே அனலாய்ச் சுவாசம் !
சொடுக்கிச் சொடுக்கிச் சிவந்த விரல்கள் !

மெத்தைச் சேர்ந்து மெதுவாய் வீழப்
புத்துயிர் பெறுமே புதுப்புது பாடல் !

-விவேக்பாரதி
11.04.2017

Popular Posts