குழந்தை வண்ணம்

தந்ததனத் தானனனத் - தனதான

முந்துமலர்த் தேனெனுமச் - சிரிப்போடு
    முந்திதனிற் றாய்நிழலிற் - றுளிராக
இந்துவெனப் பாயுமொளித் - திரளாக
    இங்ஙணமுற் றாயழகுக் - குழந்தாயே
வந்தவினைத் தீதகலத் - திருவாயில்
    வண்ணமொடத் தேவமொழிக் - கவியாவும்
சந்தமணத் தேமழலைக் - குரல்பேசிச்
    சம்பமெனத் தாளுதைபொற் - குழந்தாயே !!


-விவேக்பாரதி 
16.01.2017

Popular Posts