காகிதங்கள்

பேனா முனையின் முத்தங்களைப்
    பிரசவிக்கின்ற அன்னைகள் !
நானா நீயா நாட்டிற்குள்
    நாசம் செய்யும் பணப் பேய்கள் !
வானாய் வெளுத்த நிறத்தோடு
    வரிகள் ஏந்தும் உருவங்கள் !
தேனாய் வந்த அறிவியலின்
    தேவையான கண்டெடுப்பு !


கவிஞர் துதிக்கும் தெய்வங்கள்
    கலையில் சிறந்த அறிவியலாம் !
புவியை மறந்து மழையோடு
    பூவை ஓட்டுங் கப்பல்கள் !
தவிக்கும் மனங்கள் அமைதி பெறத்
    தளர்த்தும் கடித ஔடதங்கள் !
கவிழ்ந்து கிடக்கும் போழ்தினிலும்
    கனவை உயர்த்தும் காகிதங்கள் !

-விவேக்பாரதி
13.06.2017

Popular Posts