அம்மா நியாயமா ?
அம்மா இதுவும் நியாயமா - உன்
அடியனைப் படுத்துவ தாகுமா ?
சும்மா இருக்கும் சுகங்கேட்டேன் - ஒரு
சோதிக் கவிதைத் திறன்கொடுத்தாய் !
இம்மா வுலகில் இடங்கேட்டேன் - உடன்
இமயச் சிகரத்தில் இடங்கொடுத்தாய் !
பாடல் ஒன்றைத் தான்கேட்டேன் - அட
பாடும் திறனை எனக்களித்தாய் !
தேடல் ஒன்றைத் தான்கேட்டேன் ! - எனைத்
தேடித் திரியும் பதங்கொடுத்தாய் !
காய்ந்து கொள்ளக் கனல்கேட்டேன் - என்
கண்களுக் குள்ளே சுடர்கொடுத்தாய் !
வேய்ந்த கூரை அதுகேட்டேன் - பெரு
வெட்ட வெளிதனை ஏன்கொடுத்தாய் ?
நல்லோர் நிலையின் வழிகேட்டேன் - உள்
நானெனும் ஆணவம் நீயழித்தாய் !
எல்லாம் மாற்றிக் கொடுப்பாயேல் - அருள்
ஏறிடக் கேட்பேன் எதுகொடுப்பாய் ?
-விவேக்பாரதி
19.05.2017
அடியனைப் படுத்துவ தாகுமா ?
சும்மா இருக்கும் சுகங்கேட்டேன் - ஒரு
சோதிக் கவிதைத் திறன்கொடுத்தாய் !
இம்மா வுலகில் இடங்கேட்டேன் - உடன்
இமயச் சிகரத்தில் இடங்கொடுத்தாய் !
பாடல் ஒன்றைத் தான்கேட்டேன் - அட
பாடும் திறனை எனக்களித்தாய் !
தேடல் ஒன்றைத் தான்கேட்டேன் ! - எனைத்
தேடித் திரியும் பதங்கொடுத்தாய் !
காய்ந்து கொள்ளக் கனல்கேட்டேன் - என்
கண்களுக் குள்ளே சுடர்கொடுத்தாய் !
வேய்ந்த கூரை அதுகேட்டேன் - பெரு
வெட்ட வெளிதனை ஏன்கொடுத்தாய் ?
நல்லோர் நிலையின் வழிகேட்டேன் - உள்
நானெனும் ஆணவம் நீயழித்தாய் !
எல்லாம் மாற்றிக் கொடுப்பாயேல் - அருள்
ஏறிடக் கேட்பேன் எதுகொடுப்பாய் ?
-விவேக்பாரதி
19.05.2017