காதற் கலவரம்

மயிலிறகால் தீண்டப்பட்ட
மண் பொம்மை ஒன்று
மணம் வீசத் துவங்குகிறது !
விரல் ஊசியால்
வெட்டுப்பட்ட
கடும் பாறை ஒன்று
கவி பேசத் துவங்குகிறது !
நிலைமாறிப் போன நிழல்கூடக்
கதை நூறு சொல்லிக்
களவாடிச் செல்லும் !
அவளோடு பட்ட
அடி குதிக்காலும்
தலைபாரம் ஏற்றித்
தரைமீது துள்ளும் !
காதல் கனாக்களில்
நீளூம் வசந்தங்கள்
பிம்பங்கள் போல்
என்றன் வாசல் நிறைக்கும் !
வானற்ற நிலவு
நெஞ்சோரம் தோன்றும் !
"நான்" மட்டும் சென்று
அவளாகி நிற்கும் !
அட ! ஆம்
இவை காதற் கலவரம் !
என் கனவின் நிலவரம் !!

-விவேக்பாரதி
22.04.2017

Comments

Popular Posts