எடு டாட்டா !!
சேருது பாரெங்கும் கூட்டம்
பெரும் தீட்டம்
உயர் ஊட்டம் - யாரும்
சேர்த்ததில்லை இந்தக் கூட்டம் - இவர்
தன்னாலெழுந் திங்கேகடல்
முன்னால்வரு கின்றாரினி
பெரும் தீட்டம்
உயர் ஊட்டம் - யாரும்
சேர்த்ததில்லை இந்தக் கூட்டம் - இவர்
தன்னாலெழுந் திங்கேகடல்
முன்னால்வரு கின்றாரினி
ஓட்டம் - இல்லை வாட்டம் !
நேரட்டும் நம்ஜல்லிக் கட்டு
தடை வெட்டு
பகை முட்டு - இது
நேர்ந்திடவே பறை கொட்டு - இதைத்
தெளியாதவர் அறிவேபெற
வரலாறிதை உயர்வாய்மொழி
இட்டுத் - திசைக் கெட்டு ! (1)
வந்துள்ள கூட்டத்தைப் பாரு
இது போரு
கொஞ்சம் சீறு - இங்கு
வந்ததி ளைஞரின் தேரு - அட
வயதானவர் வரவேயிலை
வயதாலொரு பெருமையிலை
தேறு ! - இதைக் கூறு !
இந்தத் தமிழரின் நாடு
செழுங் காடு
உயர் வீடு - தமிழ்
ஈன்றது தானேபண் பாடு - இதை
அறியாதவர் தெரியாதவர்
உயிர்வாழ்வொரு பயனேயிலை
ஓடு - முகம் மூடு ! (2)
சிங்கம் அடக்கிடச் சொல்வார்
நகை கொள்வார்
மதி கொல்வார் - இதைச்
ஜீவன் வதையெனச் சொல்வார் - இவை
செய்யச்சொலும் பொய்யர்க்கதன்
மெய்தத்துவம் சொல்லித்தடை
வெல்வோம் - புகழ் கொள்வோம் !
எங்கிருந்தோ வந்த பீட்டா
தரும் நோட்டால்
தடை போட்டால் - நிற்க
எங்கள் செயல்விளை யாட்டா - மிகத்
தெளிவாகிய அறிவாளரின்
கலையாமிதை அறியாயெனில்
பீட்டா ! எடு டாட்டா ! (3)
(ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் முதலில் திரண்டு ஊர்வலம் சென்ற நிகழ்வினைச் செய்தியில் கண்டதும் எழுதிய பாடல்)
-விவேக்பாரதி
09.01.2017
தடை வெட்டு
பகை முட்டு - இது
நேர்ந்திடவே பறை கொட்டு - இதைத்
தெளியாதவர் அறிவேபெற
வரலாறிதை உயர்வாய்மொழி
இட்டுத் - திசைக் கெட்டு ! (1)
வந்துள்ள கூட்டத்தைப் பாரு
இது போரு
கொஞ்சம் சீறு - இங்கு
வந்ததி ளைஞரின் தேரு - அட
வயதானவர் வரவேயிலை
வயதாலொரு பெருமையிலை
தேறு ! - இதைக் கூறு !
இந்தத் தமிழரின் நாடு
செழுங் காடு
உயர் வீடு - தமிழ்
ஈன்றது தானேபண் பாடு - இதை
அறியாதவர் தெரியாதவர்
உயிர்வாழ்வொரு பயனேயிலை
ஓடு - முகம் மூடு ! (2)
சிங்கம் அடக்கிடச் சொல்வார்
நகை கொள்வார்
மதி கொல்வார் - இதைச்
ஜீவன் வதையெனச் சொல்வார் - இவை
செய்யச்சொலும் பொய்யர்க்கதன்
மெய்தத்துவம் சொல்லித்தடை
வெல்வோம் - புகழ் கொள்வோம் !
எங்கிருந்தோ வந்த பீட்டா
தரும் நோட்டால்
தடை போட்டால் - நிற்க
எங்கள் செயல்விளை யாட்டா - மிகத்
தெளிவாகிய அறிவாளரின்
கலையாமிதை அறியாயெனில்
பீட்டா ! எடு டாட்டா ! (3)
(ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் முதலில் திரண்டு ஊர்வலம் சென்ற நிகழ்வினைச் செய்தியில் கண்டதும் எழுதிய பாடல்)
-விவேக்பாரதி
09.01.2017