ஆடல் வண்ணம்
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன - தனதானா !
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன - தனதானா !
பாடல்:
மனதி லொருவித அக்னிசு ரக்குது
மகிழ புளகமு மெட்டிகு திக்குது
மலரி னிதழொலி மட்டுமு ரைக்குது - நினைவோடு
மரையு மிடபமு முச்சிகு திக்குது
மதன சிலைவிசை பெற்றுவெ டிக்குது
மகர விழியயி லுற்றுவெ றித்திட - அறிவாளோ ?
கனவி லனுதின மெட்டிபி டித்திடக்
கதறி யழுகரம் விக்கித வித்திடக்
கடுகி வருமுக மெப்பொழு தெக்கண - மிமைசேரும் ?
கழலி லசைவுடன் முத்துந கத்திடை
கதைக ளிசைபட சொற்களி னித்திடக்
கவிதை யதுபுனை வட்டசி லப்பொளி - விழிதேடும் !
முனுகி மொழிபவ ளப்பவ ளத்திதழ்
முறுவ லதுகொள நெற்றிவி யர்த்திடு
முளமு மினிதென முற்றுமு யிர்த்திடும் - இடையோடு
முடுகி அசைநகை சொர்க்கமு மெட்டிடும் !
முகையி னசைவுகள் முத்தைய ணித்திடும் !
முதுகில் வியர்வையை யொத்தியெ டுத்திடு - துணிவாழும்
தனன தனவென தட்டிப டித்திடத்
தழைய கழலது சுற்றிந டித்திடத்
தவழு கொலுசொலி கத்திக தைத்திட - நடமாடும்
தரும மகளவ ளக்கர மெட்டிடத்
தழுவி யவளுரு கட்டிபி டித்திடத்
தருண மதுவரு மப்பொழு துச்சியி - லுயர்வேனே !
-விவேக்பாரதி
22.09.2016