பரமேச வண்ணம்

தனத்த தானன தானன தானன
தனத்த தானன தானன தானன
தனத்த தானன தானன தானன - தனதானாநெருக்கி யோரெழி லோடுஜ டாமுடி
நெருப்பு மேவிடு மோர்விழி சூலமு
முடுத்த தோலுடை யாவையு மாடிட - வளியோடே

நினைப்பி லாடிடு பேரொடு தாளிடம்
பதிக்க வேகளி யொடுசி வாவென
நினைத்த தூயடி யாரவ ரோதிட - உடல்மேலே

கருத்த தோலுடை யாளுமை யாளவள்
கணத்த காதினி லேகுழை யோடுயிர்
கழிக்கும் பூதமு மாடிகு லாவிட - மகிழ்வோனே

கருக்கு ளாடிடு ஜீவனு மாயொளி
கடக்கு(ம்) ஓரச ராசர மாயுயர்
கணக்கி னோடுற வாடுமு மாபதி - அருளீசா !

தரைக்கு ளேகிவி நாயக னோடுரு
சிறுத்த வேலவன் யாவரு மேவடி
ததித்த தாதிமி தாளமெ லாமுரை - சொலும்போதே

தரித்த பாதிநி லாவொளி சூடிய
தனித்த பேரர வாடிட வானதி
தணிக்க வோடிட வேநட மாடிடு - முமைநேசா

எரிக்க மேவிடு தீவினை ஏகிட
எடுத்த காரிய மேஜெய மாகிட
எமப்ப தாதிக ளேவிடு நாளதன் - பயமேறா

தெழுத்தி னோடுரை பேசிடு மோசையி
லெதிர்க்கு மோர்துணை யாகிட வீழுவ
னெனக்கு தாளிடை யோரிட மேகொடு - பரமேசா !!

-விவேக்பாரதி
20.06.2017

Popular Posts