கருப்பு

கருப்பே உன்னை வாழ்த்துகிறேன் !
   காலம் எல்லாம் வணங்குகிறேன் !
இருக்கும் நிறத்தின் தன்மைநீ
   இருட்டிற் கின்னோர் பொருளும்நீ !
வருத்தம், மர்மம், பயம்,கோரம்,
   வாட்டம் காட்டும் சின்னம்நீ !
நெருப்பின் எச்சக் கரியும்நீ
   நேர்மை இல்லாப் பணமும்நீ !

நல்ல பண்புக் கிலக்கணமாய்
   நாடே உன்னை சொல்லாமல்
கொல்லும் நிறமாய் வைத்தாலும்
   குறையே காணா திருப்பாய்நீ !
எல்லோ ருள்ளும் என்றென்றும்
   எங்கோ தூங்கும் ஒருகருப்பே
கல்லின் நிறமாய் இருப்பாயே
   கடவுள் நிறமாய் ஜொலிப்பாயே !!

-விவேக்பாரதி
12.07.2017

Popular Posts