நம் அறிவியல்
என் நண்பனின் "We are not Educated illiterates" என்னும் இந்த ஒரு சொல் என்னை இப்படி எழுத வைத்தது.
ஜல்லிக்கட்டு !
இது தமிழன் அடையாளம் !
ஜல்லிக்கட்டு !
இது தமிழன் அடையாளம் !
கணினி அடக்கத் தெரியா மனிதா
காளை அடக்கல் ஏதறிவாய் ?
கற்றும் துணிச்சல் இல்லா மனிதா
கருங்கல் பெயர்த்தல் ஏதறிவாய் ?
அணியாய் எழுந்த தமிழர் வீரம்
ஆண்டிராய்ட் தமிழா ஏதறிவாய் ?
ஆற்றல் மிகுந்த தமிழர் சிந்தை
அடிமை மனிதா ஏதறிவாய் ?
துணிவே துணையாய் அறிவின் இயலைத்
துவளா நெஞ்சம் அதனோடு
தோன்ற நடத்தும் தமிழர் அறிவைத்
தொலையும் தமிழா ஏதறிவாய் ?
தணியா வேட்கை பொங்க வெழுந்தத்
தமிழர் மாண்பை ஏதறிவாய் ?
தமிழ்விளை யாட்டைப் புறத்தில் தள்ளும்
தமிழா நீதான் ஏதறிவாய் ?
களத்து மேட்டில் மண்ணைப் பதமாய்க்
கலையாய் ஆக்கும் காளைகளைக்
கடவுள், தோழன், உடன்பி றந்த
கருவாய்ப் பார்த்தல் அறிவாயா ?
புளித்துப் போன மாவைப் பசியில்
புசிக்கும் மேலை வழக்கத்தைப்
புரியும் அறிவில் தமிழா ! நெல்லின்
புதும ணத்தை அறிவாயா ?
வளத்துக் கெல்லாம் வளமாய் மாட்டை
வணங்கி டல்தான் அறிவாயா ?
வளமைக் கீரை அதற்கு மிட்டு
வளர்க்கும் பாசம் அறிவாயா ?
தளத்தில் எல்லாம் ஜல்லிக் கட்டைத்
தடைக்குள் ளாக்கச் சொல்லுகிறாய் !
தமிழா தமிழா தமிழர் தீரத்
தன்மை பற்றி அறிவாயா ?
காளை மாட்டைப் பார்த்துள் ளாயா ?
கரிசல் மணத்தை அறிவாயா ?
காலை எழுந்துக் கஞ்சி குடித்துக்
கழனி வயல்சென் றுள்ளாயா ?
தோளை உயர்த்தி ஏரை எடுத்துத்
தோன்றும் மாட்டின் பின்பூட்டித்
தொழிலும் நடக்க அதனைக் கொஞ்சித்
தொட்டுத் தொழுது முள்ளாயா ?
நாளைக் காக நாளு மோடி
நகரும் வாழ்க்கை வாழ்கின்றாய்
நகரந் தன்னில் நாகரி கத்தின்
நாமஞ் சொல்லிக் கிடக்கின்றாய்
ஆளை வளர்க்க அலைவ தாலே
அடையா ளத்தை இழப்பாயா ?
ஐயோ ! தமிழா ! அதிக நவீனம்
அறிவைப் பறிக்க விடுவாயா ?
காட்டைத் திருத்திக் கடிதங் குழுதுக்
காசைக் கொடுக்கும் காளைகளைக்
கல்லா தவனா கொடுமை செய்வான் ?
கற்று நீயேன் செய்கின்றாய் ?
வேட்டை யிடுதல் குற்றம் ! அன்றி
வெல்லும் அறிவியல் பிழையாமோ ?
வேகத் தமிழர் மாட்டின் நலத்தை
வேண்டுவ திங்கே தவறாமோ ?
மாட்டின் திமிரை இறுகப் பற்றி
மண்ணில் கொஞ்சம் சென்றுவிட்டால்
மாபெரும் வீரன் அவனுக் கந்நாள்
மணமே முடிந்துத் தந்திடுவார் !
ஏட்டைப் படித்த காரணத் தாலே
எல்லா மறிந்து கொண்டமென
எக்கா ளத்தை அறியா மையின்
எடுத்துக் காட்டாம் எனலாமே !
ஜல்லிக் கட்டின் தன்மை தன்னைச்
தடுக்கச் சொல்லும் முன்னம்நீ
சரியாய் அறிந்து கொள்வாய் தமிழா
ஜல்லிக் கட்டோர் அறிவியல்தான்
சொல்லித் தந்த பாட்டன் பூட்டன்
சொல்லு கின்றார் இலக்கியத்தில்
சோகம் தானே ! அறியா தமிழா !
சோதிக் காததை விலக்குவதில் !
நல்ல காளையின் ஆண்மை யாலே
நாட்டுப் பசுக்கள் கன்றீணும்
நாட்டுப் பசுவின் நலத்தால் தானே
நமக்கும் நல்ல பால்சேரும்
எல்லா மறிந்த திருட்டுக் கயவன்
எவனோ காட்டும் பொய்நம்பி
எதிர்க்க லாமா நம்மறி வியலை ?
எதுதான் நியாயம் சொல்தம்பி !
-விவேக்பாரதி
30.12.2016
காளை அடக்கல் ஏதறிவாய் ?
கற்றும் துணிச்சல் இல்லா மனிதா
கருங்கல் பெயர்த்தல் ஏதறிவாய் ?
அணியாய் எழுந்த தமிழர் வீரம்
ஆண்டிராய்ட் தமிழா ஏதறிவாய் ?
ஆற்றல் மிகுந்த தமிழர் சிந்தை
அடிமை மனிதா ஏதறிவாய் ?
துணிவே துணையாய் அறிவின் இயலைத்
துவளா நெஞ்சம் அதனோடு
தோன்ற நடத்தும் தமிழர் அறிவைத்
தொலையும் தமிழா ஏதறிவாய் ?
தணியா வேட்கை பொங்க வெழுந்தத்
தமிழர் மாண்பை ஏதறிவாய் ?
தமிழ்விளை யாட்டைப் புறத்தில் தள்ளும்
தமிழா நீதான் ஏதறிவாய் ?
களத்து மேட்டில் மண்ணைப் பதமாய்க்
கலையாய் ஆக்கும் காளைகளைக்
கடவுள், தோழன், உடன்பி றந்த
கருவாய்ப் பார்த்தல் அறிவாயா ?
புளித்துப் போன மாவைப் பசியில்
புசிக்கும் மேலை வழக்கத்தைப்
புரியும் அறிவில் தமிழா ! நெல்லின்
புதும ணத்தை அறிவாயா ?
வளத்துக் கெல்லாம் வளமாய் மாட்டை
வணங்கி டல்தான் அறிவாயா ?
வளமைக் கீரை அதற்கு மிட்டு
வளர்க்கும் பாசம் அறிவாயா ?
தளத்தில் எல்லாம் ஜல்லிக் கட்டைத்
தடைக்குள் ளாக்கச் சொல்லுகிறாய் !
தமிழா தமிழா தமிழர் தீரத்
தன்மை பற்றி அறிவாயா ?
காளை மாட்டைப் பார்த்துள் ளாயா ?
கரிசல் மணத்தை அறிவாயா ?
காலை எழுந்துக் கஞ்சி குடித்துக்
கழனி வயல்சென் றுள்ளாயா ?
தோளை உயர்த்தி ஏரை எடுத்துத்
தோன்றும் மாட்டின் பின்பூட்டித்
தொழிலும் நடக்க அதனைக் கொஞ்சித்
தொட்டுத் தொழுது முள்ளாயா ?
நாளைக் காக நாளு மோடி
நகரும் வாழ்க்கை வாழ்கின்றாய்
நகரந் தன்னில் நாகரி கத்தின்
நாமஞ் சொல்லிக் கிடக்கின்றாய்
ஆளை வளர்க்க அலைவ தாலே
அடையா ளத்தை இழப்பாயா ?
ஐயோ ! தமிழா ! அதிக நவீனம்
அறிவைப் பறிக்க விடுவாயா ?
காட்டைத் திருத்திக் கடிதங் குழுதுக்
காசைக் கொடுக்கும் காளைகளைக்
கல்லா தவனா கொடுமை செய்வான் ?
கற்று நீயேன் செய்கின்றாய் ?
வேட்டை யிடுதல் குற்றம் ! அன்றி
வெல்லும் அறிவியல் பிழையாமோ ?
வேகத் தமிழர் மாட்டின் நலத்தை
வேண்டுவ திங்கே தவறாமோ ?
மாட்டின் திமிரை இறுகப் பற்றி
மண்ணில் கொஞ்சம் சென்றுவிட்டால்
மாபெரும் வீரன் அவனுக் கந்நாள்
மணமே முடிந்துத் தந்திடுவார் !
ஏட்டைப் படித்த காரணத் தாலே
எல்லா மறிந்து கொண்டமென
எக்கா ளத்தை அறியா மையின்
எடுத்துக் காட்டாம் எனலாமே !
ஜல்லிக் கட்டின் தன்மை தன்னைச்
தடுக்கச் சொல்லும் முன்னம்நீ
சரியாய் அறிந்து கொள்வாய் தமிழா
ஜல்லிக் கட்டோர் அறிவியல்தான்
சொல்லித் தந்த பாட்டன் பூட்டன்
சொல்லு கின்றார் இலக்கியத்தில்
சோகம் தானே ! அறியா தமிழா !
சோதிக் காததை விலக்குவதில் !
நல்ல காளையின் ஆண்மை யாலே
நாட்டுப் பசுக்கள் கன்றீணும்
நாட்டுப் பசுவின் நலத்தால் தானே
நமக்கும் நல்ல பால்சேரும்
எல்லா மறிந்த திருட்டுக் கயவன்
எவனோ காட்டும் பொய்நம்பி
எதிர்க்க லாமா நம்மறி வியலை ?
எதுதான் நியாயம் சொல்தம்பி !
-விவேக்பாரதி
30.12.2016