காளி ஆட்சி
காளிவந் தாளென்றன் காளிவந் தாளென்னைக்
காப்பற்றிச் செல்லவே காளிவந்தாள்
தோளில்சு மந்தெனைத் தூக்கிச்சென் றாளங்கு
தோன்றிய காட்சிகள் பாடுகின்றேன் !
ஆளில்லாக் காட்டுக்குள் அன்றொரு நாளிந்த
அற்பச் சிறுபிள்ளை மாட்டிக்கொண்ட
நாளொன்றி லென்றனைக் காத்துடன் மீட்டிட
நர்த்தகி ரூபத்தில் காளிவந்தாள் !
சிங்கக்க ருச்சனை சீறும் புலிக்குரல்
சின்ன நரிகளில் எக்களிப்பு
தொங்கும் குரங்கொலி யானை முழக்கங்கள்
தோன்றும் இடமெங்கும் கேட்டிருக்க
அங்குப் புதுத்தொணி ஆர்த்திட நாட்டிய
மாடும் சலங்கை மொழியுரைக்கத்
தங்கத்த டாதகை பட்டுடை சாற்றியே
தத்திமி தோமென ஆடிவந்தாள் !
நெஞ்சத் தகழியில் நீளும் சலனங்கள்
நேரினில் வந்துள் அலையடிக்கும்
நஞ்சு கலந்திட மூளையி லேபகை
நன்கு வளர்ந்து பருத்திருக்கும்
அஞ்சும் மனமெந்தத் தோற்றத்தைக் காணிலும்
அங்கதன் காலில் விழுந்திருக்கும்
கொஞ்ச மிவைகளை மாற்றிடத் தேற்றிடக்
கோல நிலாவொளி யாகவந்தாள் !
வந்தவள் பாலனைக் கண்டதுமே எனை
வாவெனப் பற்றி அணைத்துக்கொண்டாள்
முந்தியென் நெற்றியில் முத்தம் பதித்துடன்
மூடனைப் பாவல னாக்கிவிட்டாள் !
"இந்தத் துயர்விட்டு நானுனைத் தேற்றுவேன்
இம்மொழி சத்தியம்" என்றுரைத்தாள்
சிந்தனை ஒப்பிட என்னைத்தன் தோள்களில்
சீதனத் தட்டாய மர்த்திக்கொண்டாள் !
என்னைப் படுத்திய அச்சமெனுங் கரி
எம்மை எதிர்த்திட வந்ததுகாண்
அன்னை பயங்கரி சூலத்தி னாலதன்
அங்கம் கிழித்துமுன் னேகுகிறாள் !
பின்னர் எதிர்த்திட ஆணவச் சிங்கங்கள்
பீடுடன் மேல்வந்து பாய்ந்திடவே
மின்னலெனும் சிறு பார்வையில் மாயவள்
மீண்டுமக் காட்டிடை வென்றுவிட்டாள் !
கொன்றுவிட் டாளன்னை கூட்ட நரியெனும்
கொள்கைய ழுக்கினை நீக்கிவிட்டாள்
வென்றுவிட் டாளவள் எம்மைத் துரத்திய
வெற்றுப் புகழை எரித்துவிட்டாள்
தின்றுவிட் டாளந்தக் காட்டினை மொத்தமாய்த்
தீயி னுருவத்தில் தின்றுவிட்டாள்
நின்றுவிட் டாள்காளி துக்க மகற்றியே
நீளுஞ் சினத்தினில் நின்றுவிட்டாள் !
கோபந் தணிந்திடத் தோளிலி ருந்தொரு
கோலக் கவிதையை நான்மொழிந்தேன்
சாப மகற்றிய சங்கரி வாழ்கெனச்
சாதுர்ய மாகக் கவிபொழிந்தேன் !
பாபநி விநாசினி பக்தன் கவிதையில்
பரவச மெய்தியென் நெஞ்சமர்ந்தாள்
ஆபத்து நீக்கிய அம்பிகை பாட்டெனும்
ஆட்சியை என்னுள் நடத்துகிறாள் !
அன்னையின் ஆட்சியில் நானொரு சேவகன்
அவ்வள வேயென்ற போதினிலும்
என்னை பலப்புகழ் நல்ல பழக்கங்கள்
ஏத்தி நெருங்கிடச் செய்யுகின்றாள்
மின்னல ணித்தவள் வீணையின் மேல்விரல்
மீட்டு மொலியெனப் பேசுபவள் !
என்னைக்கொண் டாளென்றன் உள்ளிருந் தேவையம்
என்றும் இருந்திட வாழ்த்துகின்றாள் !!
-விவேக்பாரதி !
15.05.2017
காப்பற்றிச் செல்லவே காளிவந்தாள்
தோளில்சு மந்தெனைத் தூக்கிச்சென் றாளங்கு
தோன்றிய காட்சிகள் பாடுகின்றேன் !
ஆளில்லாக் காட்டுக்குள் அன்றொரு நாளிந்த
அற்பச் சிறுபிள்ளை மாட்டிக்கொண்ட
நாளொன்றி லென்றனைக் காத்துடன் மீட்டிட
நர்த்தகி ரூபத்தில் காளிவந்தாள் !
சிங்கக்க ருச்சனை சீறும் புலிக்குரல்
சின்ன நரிகளில் எக்களிப்பு
தொங்கும் குரங்கொலி யானை முழக்கங்கள்
தோன்றும் இடமெங்கும் கேட்டிருக்க
அங்குப் புதுத்தொணி ஆர்த்திட நாட்டிய
மாடும் சலங்கை மொழியுரைக்கத்
தங்கத்த டாதகை பட்டுடை சாற்றியே
தத்திமி தோமென ஆடிவந்தாள் !
நெஞ்சத் தகழியில் நீளும் சலனங்கள்
நேரினில் வந்துள் அலையடிக்கும்
நஞ்சு கலந்திட மூளையி லேபகை
நன்கு வளர்ந்து பருத்திருக்கும்
அஞ்சும் மனமெந்தத் தோற்றத்தைக் காணிலும்
அங்கதன் காலில் விழுந்திருக்கும்
கொஞ்ச மிவைகளை மாற்றிடத் தேற்றிடக்
கோல நிலாவொளி யாகவந்தாள் !
வந்தவள் பாலனைக் கண்டதுமே எனை
வாவெனப் பற்றி அணைத்துக்கொண்டாள்
முந்தியென் நெற்றியில் முத்தம் பதித்துடன்
மூடனைப் பாவல னாக்கிவிட்டாள் !
"இந்தத் துயர்விட்டு நானுனைத் தேற்றுவேன்
இம்மொழி சத்தியம்" என்றுரைத்தாள்
சிந்தனை ஒப்பிட என்னைத்தன் தோள்களில்
சீதனத் தட்டாய மர்த்திக்கொண்டாள் !
என்னைப் படுத்திய அச்சமெனுங் கரி
எம்மை எதிர்த்திட வந்ததுகாண்
அன்னை பயங்கரி சூலத்தி னாலதன்
அங்கம் கிழித்துமுன் னேகுகிறாள் !
பின்னர் எதிர்த்திட ஆணவச் சிங்கங்கள்
பீடுடன் மேல்வந்து பாய்ந்திடவே
மின்னலெனும் சிறு பார்வையில் மாயவள்
மீண்டுமக் காட்டிடை வென்றுவிட்டாள் !
கொன்றுவிட் டாளன்னை கூட்ட நரியெனும்
கொள்கைய ழுக்கினை நீக்கிவிட்டாள்
வென்றுவிட் டாளவள் எம்மைத் துரத்திய
வெற்றுப் புகழை எரித்துவிட்டாள்
தின்றுவிட் டாளந்தக் காட்டினை மொத்தமாய்த்
தீயி னுருவத்தில் தின்றுவிட்டாள்
நின்றுவிட் டாள்காளி துக்க மகற்றியே
நீளுஞ் சினத்தினில் நின்றுவிட்டாள் !
கோபந் தணிந்திடத் தோளிலி ருந்தொரு
கோலக் கவிதையை நான்மொழிந்தேன்
சாப மகற்றிய சங்கரி வாழ்கெனச்
சாதுர்ய மாகக் கவிபொழிந்தேன் !
பாபநி விநாசினி பக்தன் கவிதையில்
பரவச மெய்தியென் நெஞ்சமர்ந்தாள்
ஆபத்து நீக்கிய அம்பிகை பாட்டெனும்
ஆட்சியை என்னுள் நடத்துகிறாள் !
அன்னையின் ஆட்சியில் நானொரு சேவகன்
அவ்வள வேயென்ற போதினிலும்
என்னை பலப்புகழ் நல்ல பழக்கங்கள்
ஏத்தி நெருங்கிடச் செய்யுகின்றாள்
மின்னல ணித்தவள் வீணையின் மேல்விரல்
மீட்டு மொலியெனப் பேசுபவள் !
என்னைக்கொண் டாளென்றன் உள்ளிருந் தேவையம்
என்றும் இருந்திட வாழ்த்துகின்றாள் !!
-விவேக்பாரதி !
15.05.2017
Comments
Post a Comment