ஔவை"யார்" ?
பாரதி கலைக்கழகத்தின் "ஔவையார் விழா" கவியரங்கில் படைத்த கவிதை
செந்தமிழைப் பாடுதற்காய்ச் சேர்ந்த இளமையுரு
வெந்தொழிக வென்றே வெகுண்டுரைத்து - வந்தடைக !
அன்னை உருவென் றதையடைந்த ஔவைபுகழ்
என்றும் இருக்கும் எழில் !
{வேறு}
ஓரௌவை இருந்தாலே ஒண்டமிழ்விண்
அடைந்திருக்கும் ! ஒன்றி ரண்டா
பேரௌவை எனப்பெற்ற ஆறௌவை
கொண்டதமிழ் பெற்ற பேற்றைச்
சீரொத்த கவிதையிலே இவரிவரென்
றுரைத்தவரின் சிறப்பாம் பாட்டுச்
சாரத்தைச் சொலியடுக்கச் சின்னவனும்
முன்வந்தேன் சபையோர் கேட்க
அக்காலப் புலவருளே அதிசிறந்த
வொருத்தியென ! அதிய மானின்
மிக்குவரும் நட்புவெள்ளம் பாயுமொரு
களமெனவும் ! மிளிரும் உண்மை
பக்குவமாய் எடுத்துரைத்துத் தொகைநூலுள்
தனியிடத்தைப் பதித்த பெண்ணாள் !
இக்கவிதை நாயகியாம் ஔவையெனும்
விறலியவள் இளையா ளென்பார் !
புறப்பாட்டில் நிலத்தன்மை, போர்மாண்டான்
தாய்நிலமை, புரியச் சொல்லிக்
குறுந்தொகையில் வானளவுக் காமம்நற்
றினையினிலே குளிர்ந்த காதல்
நறுந்தேனாய்ச் சொல்லியதில் தமிழர்தம்
நற்பெருமை நலத்தைச் சொன்னாள்
சிறப்புறவே நான்சொன்ன முதலொவை
சங்கத்தின் சீராம் காண்க !
பாரியவன் மகளீர்க்கு மணமுடிக்க
வந்தவளோர் பாட்டி ஔவை !
சீரியதாய்த் தனிப்பாடல் எளியபதம்
நற்கருத்தைச் சிந்தி நின்றாள்
கூரியவேல் மூவேந்தர் படையெடுக்க
நிலம்பிளந்த கூற்றுக் காரி
வாரியவள் தந்ததனிப் பாடல்கள்
செந்தமிழின் வளங்க ளாகும் !
இரண்டாவத தௌவையிவள் பெரிதரிது
கொடிதிதினிதை இயற்றிச் சொன்னாள்
திரண்டபெரும் உலகத்தில் கற்றதுகை
மண்ணளவாம் ! சித்தி ரந்தான்
உரியதொரு கைப்பழக்கம் செந்தமிழோ
நாப்பழக்கம் ! உலகில் யார்க்கும்
அரியதென ஏதுமிலை ! ஒவ்வொருவர்க்
கொன்றெளிதாம் உரைத்திட் டாளே !
ஆத்திசூடி மூதுரைகொன் றைவேந்தன்
நல்வழியும் அளித்த ஔவை
பூத்ததுவோ பன்னிரெண்டாம் நூற்றாண்டாம்
நன்னெறிகள் புரியும் வண்ணம்
காத்திந்த மனிதரினம் கடமைதனைக்
கண்டுகொள்ளக் கவிதை பாடிச்
சேர்த்தனளே ஓரௌவை அறம்சொல்லும்
நல்லௌவை செஞ்சொல் பாட்டி !
அறம்செய்ய விரும்பென்றும் ஆறுவது
சினமென்றும் அன்னை தந்தை
அறிந்திடுமுன் தெய்வமெனச் சொல்லினளே
மூதுரையில் அறத்தின் பாடம்
பொறுப்புறவே யாத்தனளே பால்தெளிதேன்
நாதனுக்குப் பொழிந்தி ருக்கும்
சிறப்புடையாள் இவ்வௌவை சொன்னதெலாம்
குறளொத்த தன்மைத் தாகும்
ஒருகொம்பு நாயகனாம் உமையம்மை
பாலகனாம் ஒருவன் மேலே
விருப்போடோர் அகவலதைப் பாடியவ
ளோரௌவை விந்தைச் சித்தாய்
இருப்பதெலாம் அவன்செயும் செயலென்று
பாடினளே இகத்தில் வாழ்வு
தரிக்கின்ற வேளையிலே கோடியுறும்
செயல்நமக்குச் சொல்லி னாளே !
தமிழறியும் பெருமாளின் கதையினிலே
பேயெற்றும் தமிழ்மூ தாட்டி
அமிழ்தெனவே பெறற்கரிதாம் பந்தனது
அந்தாதி அளித்த பாட்டி
கமழ்தமிழில் கருத்துகளை அள்ளியள்ளி
வழங்கியநற் கவிச்சீ மாட்டி
அமைகின்றேன் ஆறௌவை இருந்தனரென்
றிக்கவியில் எடுத்துக் காட்டி !
-விவேக்பாரதி
19.02.2017
செந்தமிழைப் பாடுதற்காய்ச் சேர்ந்த இளமையுரு
வெந்தொழிக வென்றே வெகுண்டுரைத்து - வந்தடைக !
அன்னை உருவென் றதையடைந்த ஔவைபுகழ்
என்றும் இருக்கும் எழில் !
{வேறு}
ஓரௌவை இருந்தாலே ஒண்டமிழ்விண்
அடைந்திருக்கும் ! ஒன்றி ரண்டா
பேரௌவை எனப்பெற்ற ஆறௌவை
கொண்டதமிழ் பெற்ற பேற்றைச்
சீரொத்த கவிதையிலே இவரிவரென்
றுரைத்தவரின் சிறப்பாம் பாட்டுச்
சாரத்தைச் சொலியடுக்கச் சின்னவனும்
முன்வந்தேன் சபையோர் கேட்க
அக்காலப் புலவருளே அதிசிறந்த
வொருத்தியென ! அதிய மானின்
மிக்குவரும் நட்புவெள்ளம் பாயுமொரு
களமெனவும் ! மிளிரும் உண்மை
பக்குவமாய் எடுத்துரைத்துத் தொகைநூலுள்
தனியிடத்தைப் பதித்த பெண்ணாள் !
இக்கவிதை நாயகியாம் ஔவையெனும்
விறலியவள் இளையா ளென்பார் !
புறப்பாட்டில் நிலத்தன்மை, போர்மாண்டான்
தாய்நிலமை, புரியச் சொல்லிக்
குறுந்தொகையில் வானளவுக் காமம்நற்
றினையினிலே குளிர்ந்த காதல்
நறுந்தேனாய்ச் சொல்லியதில் தமிழர்தம்
நற்பெருமை நலத்தைச் சொன்னாள்
சிறப்புறவே நான்சொன்ன முதலொவை
சங்கத்தின் சீராம் காண்க !
பாரியவன் மகளீர்க்கு மணமுடிக்க
வந்தவளோர் பாட்டி ஔவை !
சீரியதாய்த் தனிப்பாடல் எளியபதம்
நற்கருத்தைச் சிந்தி நின்றாள்
கூரியவேல் மூவேந்தர் படையெடுக்க
நிலம்பிளந்த கூற்றுக் காரி
வாரியவள் தந்ததனிப் பாடல்கள்
செந்தமிழின் வளங்க ளாகும் !
இரண்டாவத தௌவையிவள் பெரிதரிது
கொடிதிதினிதை இயற்றிச் சொன்னாள்
திரண்டபெரும் உலகத்தில் கற்றதுகை
மண்ணளவாம் ! சித்தி ரந்தான்
உரியதொரு கைப்பழக்கம் செந்தமிழோ
நாப்பழக்கம் ! உலகில் யார்க்கும்
அரியதென ஏதுமிலை ! ஒவ்வொருவர்க்
கொன்றெளிதாம் உரைத்திட் டாளே !
ஆத்திசூடி மூதுரைகொன் றைவேந்தன்
நல்வழியும் அளித்த ஔவை
பூத்ததுவோ பன்னிரெண்டாம் நூற்றாண்டாம்
நன்னெறிகள் புரியும் வண்ணம்
காத்திந்த மனிதரினம் கடமைதனைக்
கண்டுகொள்ளக் கவிதை பாடிச்
சேர்த்தனளே ஓரௌவை அறம்சொல்லும்
நல்லௌவை செஞ்சொல் பாட்டி !
அறம்செய்ய விரும்பென்றும் ஆறுவது
சினமென்றும் அன்னை தந்தை
அறிந்திடுமுன் தெய்வமெனச் சொல்லினளே
மூதுரையில் அறத்தின் பாடம்
பொறுப்புறவே யாத்தனளே பால்தெளிதேன்
நாதனுக்குப் பொழிந்தி ருக்கும்
சிறப்புடையாள் இவ்வௌவை சொன்னதெலாம்
குறளொத்த தன்மைத் தாகும்
ஒருகொம்பு நாயகனாம் உமையம்மை
பாலகனாம் ஒருவன் மேலே
விருப்போடோர் அகவலதைப் பாடியவ
ளோரௌவை விந்தைச் சித்தாய்
இருப்பதெலாம் அவன்செயும் செயலென்று
பாடினளே இகத்தில் வாழ்வு
தரிக்கின்ற வேளையிலே கோடியுறும்
செயல்நமக்குச் சொல்லி னாளே !
தமிழறியும் பெருமாளின் கதையினிலே
பேயெற்றும் தமிழ்மூ தாட்டி
அமிழ்தெனவே பெறற்கரிதாம் பந்தனது
அந்தாதி அளித்த பாட்டி
கமழ்தமிழில் கருத்துகளை அள்ளியள்ளி
வழங்கியநற் கவிச்சீ மாட்டி
அமைகின்றேன் ஆறௌவை இருந்தனரென்
றிக்கவியில் எடுத்துக் காட்டி !
-விவேக்பாரதி
19.02.2017