இரவுக் கவிஞன்
இரவெனுங் கவிஞன் வருகின்றான்
இதனை என்னுள் தருகின்றான் !
இதனை என்னுள் தருகின்றான் !
செக்கராய் விரிந்த வானம்
சேர்த்தெழில் கூட்டும் மேகம்
பொக்கெனச் சிரித்துச் சாய்ந்த
பொதுவெனும் ஒளியின் தேவன் !
திக்கெலாம் தென்றல் கோலம்
திடுமென இருட்டிக் கொண்டு
கக்கிருள் வானுக் குள்ளே
கவிதைகள் வழங்கு கின்றான் !
முதலிலே மீன்க ளென்னும்
முத்தகச் செய்யுள் கோடி
பதித்தவன் வான்நி றைத்தான் !
பார்ப்பவர் வியக்கும் வண்ணம்
கதிரதன் ஒளியில் கொஞ்சம்
கடனதைப் பெற்றுக் கொண்டு
புதிரெனத் தோன்று மந்தப்
புதுநிலா நூலைத் தந்தான் !
நமையெலாம் கவிதை செய்ய
நடத்திடும் தாயா மந்த
உமையவள் தானோ இங்கும்
உயர்கவி நல்கு கின்றாள் ?
அமைவது யாரின் வித்தை ?
அழகுகள் யாரின் விந்தை ?
சமைப்பதா ரெனினும் ! ஆகா !
சகலமும் பெற்று வாழ்க !
- விவேக்பாரதி
21.04.2017
சேர்த்தெழில் கூட்டும் மேகம்
பொக்கெனச் சிரித்துச் சாய்ந்த
பொதுவெனும் ஒளியின் தேவன் !
திக்கெலாம் தென்றல் கோலம்
திடுமென இருட்டிக் கொண்டு
கக்கிருள் வானுக் குள்ளே
கவிதைகள் வழங்கு கின்றான் !
முதலிலே மீன்க ளென்னும்
முத்தகச் செய்யுள் கோடி
பதித்தவன் வான்நி றைத்தான் !
பார்ப்பவர் வியக்கும் வண்ணம்
கதிரதன் ஒளியில் கொஞ்சம்
கடனதைப் பெற்றுக் கொண்டு
புதிரெனத் தோன்று மந்தப்
புதுநிலா நூலைத் தந்தான் !
நமையெலாம் கவிதை செய்ய
நடத்திடும் தாயா மந்த
உமையவள் தானோ இங்கும்
உயர்கவி நல்கு கின்றாள் ?
அமைவது யாரின் வித்தை ?
அழகுகள் யாரின் விந்தை ?
சமைப்பதா ரெனினும் ! ஆகா !
சகலமும் பெற்று வாழ்க !
- விவேக்பாரதி
21.04.2017